குடியரசு தலைவருக்கான தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத் தலைவர் ராஜூவ் குமார்.
இந்திய நாட்டின் தற்போது 14 வது குடியரசு தலைவராக பதவி வகிப்பவர் உத்திர பிரதேச மாநிலத்தை சார்ந்த ராம்நாத் கோவிந்த். இவரது ஐந்தாண்டு பதவி காலமானது ஜூலை 24 ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனையடுத்து புதிய தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று வெளியிட்டார். நாட்டின் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 29 ஆம் தேதி வரை வேட்பாளர்கள் தாக்கல் செய்யலாம். ஜுன் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூலை 2 ஆம் தேதி கடைசி நாள்.

ஜூலை 18 ஆம் பதிவாகும் வாக்குகள், ஜூலை 21 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். மாநிலங்களவை தலைமை செயலாளர் பிரமோத் சந்திர மோடி தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்று ராஜீவ் குமார் தெரிவித்தார்.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் 776 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 4,033 சட்டமன்ற உறுப்பினர்கள் என 4,809 பேர் வாக்களிக்கவுள்ளனர். தேர்தலில் விகிதச்சார வாக்களிப்பு முறை பின்பற்றப்படுகிறது. அதன்படி, ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 1-ஐ விட அதிகமானது.
அடுத்த குடியரசு தலைவர் யார் என எதிர்ப்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. இதற்கிடையில் ஆளும் பா.ஜ.க அரசு நிறுத்த போகும் நபர் யாராக இருக்கும் என்றும் ஆவலாக இருக்கின்றனர். அதைபோலவே எதிர்கட்சியான காங்ரசும் எந்த நபரை வேட்பாளராக நிறுத்த போகிரார்கள் என்றும் ஆவலாக இருக்கின்றன அரசியல் வட்டாரங்கள்.