இந்திய நாட்டின் வம்சாவளியான டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலை முதல் கட்டமாக நீக்கிய உலகின் முதல் பணக்காரரான எலன் மாஸ்க்.
டிவிட்டர் நிறுவனத்தை சட்டப்படி தனதாக்கினார் எலன் மாஸ்க் முதல் கட்டமாக இந்திய வம்சாவளினரான தலைமை அதிகாரியான டிவிட்டரின் சிஇஓ பராக் அகர்வலையும் தலைமை நிர்வாகியான விஜயா காடே ஆகியோரை பணியிலிருந்து நீக்கி அதிரடியை தொடங்கியுள்ளார்.
உலகின் முதல் பணக்காரரான எலன் மாஸ்க் டிவிட்டர் சமூகதளத்தை வாங்குவதாக அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னே உறுதியானது. அதற்காக மூன்றரை லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு ஓப்பந்தம் மேற் கொள்ளப்பட்டது. பின்னர் பல சந்தேகங்களால் அதனை கிடப்பில் போட்டார் எலன்.

ட்விட்டர் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் மதிக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கு தொடுப்போம் என்று கூறி வந்தனர். அதே சமயம், ட்விட்டர் நிறுவனத்தை நான் மொத்தமாக வாங்க ரெடி. ஆனால் இதில் எத்தனை பொய்யான கணக்குகள் இருக்கிறது என்று கணக்கு காட்ட வேண்டும். எத்தனை பாட்கள் இருக்கின்றன என்று கணக்கு காட்ட வேண்டும். இல்லையென்றால் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும். 20 சதவிகிதம் அளவிற்கு பாட் இருந்தால் ட்விட்டர் நிறுவனத்தை வாங்க மாட்டேன் என்று மஸ்க் குறிப்பிட்டு வந்தார்.
இதன் காரணமாக ட்விட்டர் அதிகாரிகளுக்கும் – மஸ்க்கிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மஸ்க் வாங்குவதாக கூறி ஒப்பந்தம் செய்துவிட்டு, பின்னர் அதில் இருந்து பின் வாங்கினால், அது மிகப்பெரிய அளவில் இழப்பை ஏற்படுத்தும். முக்கியமாக பங்கு சந்தையில் ட்விட்டர் நிறுவனத்திற்கு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும். இதன் காரணமாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. பேச்சுவார்தையின் முடிவில் ட்விட்டர் நிறுவனத்தை மஸ்க் வாங்க ஒப்புக்கொண்டார்.
இதனிடையே நேற்று டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு ஓப்பந்தம் சட்டரீதியாக மேற் கொள்ளப்பட்டது. இந்நிலையில், டிவிட்டர் சிஇஓ மற்றும் தலைமை நிர்வாகியினரான இந்திய வம்சாவளியினரை எலன் மாஸ்க் பணியிலிருந்து நீக்கி அதிரடி காட்டினார்.