Home விளையாட்டு 2 வது டெஸ்டிலும் வெல்ல தீவிர வலைப் பயிற்சியில் இந்திய வீரர்கள்

2 வது டெஸ்டிலும் வெல்ல தீவிர வலைப் பயிற்சியில் இந்திய வீரர்கள்

0
4

2 வது டெஸ்ட் போட்டி தாகாவில் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றுள்ள நிலையில் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அங்கு 3 ஓருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களை விளாயாட திட்டமிட்டது. அதன்படி 2-1 என்ற வெற்றி கணக்குடன் ஓருநாள் தொடரை வென்று அசத்தியது வங்கதேசம். அடுத்ததாக டெஸ்ட் தொடரையாவது இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் விளையாடி வந்த ரோஹூத் சர்மா காயம் ஏற்பட்டதன் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது இந்திய அணிக்கு கே.எல்.ராகுல் கேப்டனாக இருந்து இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்.

2 வது டெஸ்டிலும் வெல்ல தீவிர வலைப் பயிற்சியில் இந்திய வீரர்கள்

முதலாவது டெஸ்ட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்திய அணி வீரர்கள் ஸ்ரேயாஸ், கில், புஜாரா, அஸ்வின், ரிஷாப்பந் உள்ளிட்டோர் நல்ல ஆட்டத்தை நிரூபித்து வந்துள்ளனர். இதன் காரணமாக இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை தோல்வியடைய செய்தது.

தொடர்ந்து இந்திய அணி இரண்டாவது டெஸ்டை வென்று தொடரையும் வெல்லும் வகையில் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஓருநாள் தொடரை வங்கதேசம் வென்றுள்ள நிலையில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கட்டாயம் இந்திய அணி வீரர்களுக்கு இருப்பதை அறிய முடிகிறது.

இந்த போட்டியிலும் இந்திய அணியின் கேப்டன் ரோஹூத் சர்மா விளையாட முடியாது அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை மேற் கொண்டு வருகிறார். வேகப்பந்து வீச்சாளரான நவ்தீப் சைனியும் காயம் காரணமாக இந்த போட்டியிலிருந்து விலகி உள்ளார்.

இதையும் படியுங்கள்: IPL MINI AUCTION 2022: சிஎஸ்கே எதிர்நோக்கும் முக்கிய வீரர் இவரா?

இது போன்ற தகவலுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here