இந்திய பாரத பிரதமர் மோடியின் தாயார் ஹூராபென் மோடி உடல்நல பிரச்சனையால் சிகிச்சை மேற் கொண்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 100.
அகமதாபாத்தில் உள்ள யு.என். மேத்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதமர் மோடியின் தாயார் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் நரேந்திர மோடி ‘ஓரு புகழ் பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியை சேர்ந்துள்ளது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
நரேந்திர மோடி ஓவ்வொரு ஆண்டும் தனது பிறந்தநாளுக்கு அவரது தயாரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுவது நாம் அறிந்ததே அதுமட்டும் அல்லாமல் தாயார் மீது அதீத அன்பு வைத்திருப்பவர் மோடி. இந்த நிலையில் அனைத்து அரசியல் தலைவர்களும் மோடியின் தாயார் இரங்கலுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதர் மோடி இன்று மேற்கு வங்கம் சென்று 7,800 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற இருந்தார். ஹவுரா-நியூஜல்பை குரி இடையே வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார்.
நேதாஜூ சுபாஷ் சந்திர போஸின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவும் தொடர்ந்து கொல்கத்தா மெட்ரோவின் ஊதாவழிப்பாதையான ஜோகா தராதாலா வழித்தடத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க இருந்தார்.
இதையும் படியுங்கள்: திருச்சி: ஓலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு
தேசிய கங்கை நீர் சுத்தப்படுத்தும் திட்டத்தின் 7 சுத்திகரிப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட திட்டமிடப்பட்டது. மேலும், பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இருந்த நிலையில் அவரது தாயாரின் மறைவால் என்ன நடக்கும் என்று அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லை.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.