அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கிறது

0
17

அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 

அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சில தினங்களாகவே சரிவை சந்தித்து வருவது கவலை அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து 48 வது அமர்வாக சரிவை சந்திக்கிறது.

தொடர்ந்து இந்திய சந்தைகளில் இருந்து அன்னிய முதலீடுகள் வெளியேறி வரும் நிலையில், இது பங்கு சந்தையில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது மேற்கொண்டு ரூபாய் மதிப்பு சரிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்திக்கிறது

இன்று இந்திய ரூபாயின் மதிப்பானது 79.74 ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த அமர்வில் அதிகபட்சமாக 79.66 ரூபாய் என்ற அளவக்கு சரிவினைக் கண்டு இருந்தது. முடிவில் 79.62 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இது தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இதுவும் ரூபாய் சரிவுக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்து உள்ளது.

அமெரிக்காவில் எதிர்பார்த்ததை போலவே பணவீக்கமானது 4 தசாப்தஙளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் 9.1% என்ற அளவுக்கு மோசமாக அதிகரித்துள்ளது. இது மேற்கொண்டு அமெரிக்காவின் மத்திய வங்கியினை வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது பாதுகாப்பு புகலிடமான தங்கத்தின் விலையினை தூண்டலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம் மீண்டும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க தூண்டலாம். இது டாலரின் மதிப்புக்கு சாதகமாக அமையலாம். இது ரூபாயின் மதிப்புக்கு எதிராக அமையலாம்.

உக்ரைன் ரஷ்யா இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது பணவீக்கத்தினையும் தூண்டியுள்ளது. இது மேற்கொண்டு தேவையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here