இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக தகவல். மேலும், ஓருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரான விராட் கோலி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் பதவிகளையும் வகித்துள்ளார். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியடித்த அவர் அவரின் சதத்திற்கு சதம் என்ற சதம் மற்றும் சச்சினின் ரன்களை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவிப்பை அளிக்க உள்ள தகவல் அவரின் தீவிர ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு விமர்சனங்களை கடந்திருந்தாலும் மீண்டும் தனது பழைய நிலைக்கு திரும்பியுள்ளதை இந்தாண்டு அவர் விளையாடிய போட்டிகளை வைத்து அறியலாம். இதனையே அவரது ரசிகர்களும் விரும்பி வருகின்றனர். ஆனால், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.

கடந்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டிகளில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக காணப்படும் விராட் நிறைய ரன்களை குவிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் வங்கதேசத் தொடர் முழுவதும் சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னணி பேட்டர்களும் இந்த தொடரில் சரிவர செயல்படாத நிலையே இருந்து வருகிறது. இந்த நிலையில் விராட் கோலியும் ரன்கள் ஏதும் எடுக்காமல் விரைவில் அவுட்டாகி உள்ளார்.
இதையும் படியுங்கள்: கிறிஸ்டியானோ ரொனால்டோவின் வாழ்க்கையும் சொத்து மதிப்பு
இந்நிலையில், டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற போவதாகவும் ஓருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த நடந்த போட்டியில் 72 வது சதத்தை பூர்த்தி செய்து 71 வது சதத்துடன் இரண்டாவது இடத்தை பெற்றிருந்த ரிக்கி பாண்டிங்கை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் முதல் இடத்தில் 100 சதங்களுடன் சச்சின் முதல் இடத்தில் இருந்து வருகிறார் அவரின் சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டி20யில் ஓய்வு என தகவல்.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.