ஆசிய கோப்பை போட்டிக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்லாது என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தகவல்.
இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளை காண உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர் நோக்கி பார்ப்பதால் கிரிக்கெட் மைதானம் முதல் வளைதளங்கள் டிவிகள் என அனைத்தும் மிக பரப்பரப்பான நிலையில் முதல் இடத்தில் அந்த நிகழ்ச்சிகள் அனைத்து இடங்களிலும் ஓளிப்பரப்பாகி வரும். இதனால் இந்தியா பாகிஸ்தான் அணிகள் பங்கேற்கும் போட்டிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காணப்படும்.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிகளை பாகிஸ்தான் அரசு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், 2008 க்கு பிறகு இந்தியா பாகிஸ்தான் அவரவர் நாடுகளில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வருகின்றது. அடுத்த வருடம் நடக்கும் போட்டிக்கு பாகிஸ்தான் நாட்டிற்கு சென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் பாகிஸ்தானுக்கு சென்று இந்திய அணி விளையாடாது என பிசிசிஐ செயளாலர் ஜெய்ஷா தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுடனான கருத்து மற்றும் பல இதர பிரச்சனைகளால் சுகந்திரமாக செயல்பட முடியாமல் உள்ளது. மிக முக்கியமாக இந்திய எல்லையான காஷ்மீரை அந்நாடு உரிமை கொண்டாடுவதால் இந்திய அரசாங்கம் அதனை எதிர்த்து வருகிறது. காஷ்மீர் போர் கூட நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. அந்த போரில் இருநாட்டு ராணுவ வீரர்கள் உயிர் இழந்தனர். பலவித பிரச்சனைகள் இருப்பதால் இநதியா பாகிஸ்தானுடன் எவ்வித தொடர்பையும் வைத்து கொள்ளாமல் இருந்து வருகின்றது.
இதையும் கவனியுங்கள்: IND VS AUS T20: வாம்அப் மேட்ச்சில் இந்தியா இறுதி ஓவரில் திரில் வெற்றி
இந்நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியில் வகித்து வந்த கங்குலியின் பதவி காலம் முடிவடைகிறது. மீண்டும் தலைவர் பதவியை அவர் நாடி இருக்கிறார் கங்குலி. ஆனால் ஐபிஎல் தலைவராக நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனை கங்குலி மறுத்து விட்டார் என தகவல் வநதுள்ளது.
தற்போது, 1983 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று தந்த ரோஜர் பின்னியை தலைவராக பொறுப்பேற்க உள்ளார். இதே போன்று பாஜக எம்எல்ஏ ஆஷிஸ் செலாருக்கு பிசசிஐயின் பொருளாளர் பதவி வழங்கப்பட உள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் ஆசிய கோப்பை போட்டிக்கு பாகிஸ்தானுக்கு இந்திய அணி செல்லாது என்றும் இந்த போட்டிகள் வேறு இடத்தில் நடைபெறும் என்றும் அங்கு இந்திய அணி பங்கேற்கும் என்றும் பிசிசிஐ செயலாளர் ஜெஷா தெரிவித்துள்ளார்.