இந்திய டென்னிஸ் வீராங்கனையாக இந்தியாவில் ஜெலித்து வந்த சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயப் மாலிக்கை திருமணம் செய்து கொண்டு 12 ஆண்டுகள் வாழ்ந்து வந்தனர்.
இந்தியாவின் முன்னணி வீராங்கனையாக டென்னிஸில் பல பதக்கங்களை வாங்கி குவித்தவர். இவர் கடந்த 2010 ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். 12 ஆண்டுகள் வரை திருப்பதிகரமான திருமண வாழ்வை பெற்று வந்தனர்.
”சானியா மிர்சா கடந்த சில நாட்களாக இந்தியாவில் வசித்து வருகிறார்.அவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். ஆம், அவர்கள் இப்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளனர். அதற்கு மேல் என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் பிரிந்துவிட்டார்கள் என்பதை உறுதிப்படுத்த முடியும்” என்று பாகிஸ்தானில் உள்ள மாலிக்கின் நிர்வாகக் குழுவில் இருந்த ஒருவர் உறுதிப்படுத்தினார்.
இதையும் படியுங்கள்: குஜராத்: கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி தேர்தலில் போட்டியிடுகிறார்

இந்த விவகாரத்து பற்றி இருவரும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சமூக வலைதளத்தில் மற்றும் ஊடகங்களில் தெரிவிக்கவில்லை. வாழ்வில் ஓருவரை ஓருவர் புரிந்து கொள்வதில் சில கஷ்டங்கள் வரும் தான் ஆனால் நாம் பெற்ற குழந்தையின் நன்மைக்காக தொடர்ந்து ஓன்றாக வாழ தான் வேண்டும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
சோயிப் தனது இன்ஸ்டாவில் “நீங்கள் பிறந்தவுடன், நாங்கள் மிகவும் அடக்கமாகிவிட்டோம், வாழ்க்கை எங்களுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. நாம் ஒவ்வொரு நாளும் ஒன்றாக இருப்பதில்லை, சந்திப்பதில்லை, ஆனால் பாபா உங்களைப் பற்றியும் உங்கள் புன்னகையைப் பற்றியும் ஒவ்வொரு நொடியும் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
மேலும், நீங்கள் கேட்கும் அனைத்தையும் அல்லா உங்களுக்கு வழங்குவார் எங்களது ஆசிர்வாதங்கள் எப்போதும் உங்களுக்கு இருக்கும் எனவும் பதிவிட்டிருந்தார்.
இது போன்ற பல தகவலகளை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.