டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

0
5

டி20 உலக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 19 வயதுடையோருக்கான துடுப்பாட்டத்தின் இறுதியில் இங்கிலாந்தை வென்று உலக கோப்பையை பெற்று இந்தியாவிற்கு பெருமை தந்துள்ளது.

19 வயதுடையோருக்கான T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த சில தினங்களாக நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் விளையாடி வந்த இந்திய மகளிர் அணி ஆரம்பம் முதலே நன்றாக விளையாடி வந்தது. 27ந் தேதி நடந்த அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வென்று உலக கோப்பை இறுதி போட்டிக்கு முன்னேறி அனைவரின் எதிர்பார்பையும் பெற்று வந்தது.

அரையிறுதி போட்டியில் முதலாவாதாக டாஸை வென்ற இந்திய மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய மகளிர் அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை பெற்று வந்த நியூசிலாந்து மகளிர் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்களை எடுத்தது.

டி20 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

108 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பேட்டிங்க செய்து வந்த இந்திய மகளிர் அணி 14.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்களை எடுத்து நியூசிலாந்தின் உலக கோப்பை இறுதி போட்டிக்கு செல்லும் கனவிற்கு முட்டுக்கட்டை போட்டு இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளதை அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இந்தியா வென்று T20 உலக கோப்பையை பெற்றது.

இதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியினர் 17.1 ஓவர்களுக்கு 68 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தனர். எளிய இலக்கை எதிர்நோக்கிய இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகள் 14 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி தோல்வியை கொடுத்தனர்.

இதையும் படியுங்கள்: சர்வதேச டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் சானியா மிர்ஸா

இதனால் 2023 ஆம் ஆண்டின் முதல் டி20 உலக கோப்பையை பெற்று இந்திய மகளிர் அணிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களில் அனைவரும் பாராட்டி வருகின்றனர். U19 மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலர் ஜெயிஷா 5 கோடி பரிசுத் தொகை அறிவித்து பாராட்டி உள்ளார்.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here