இந்திய அணியின் விராட் கோலிக்கு கேரளா & மெல்பனில் செம வரவேற்பு

0
13

இந்திய அணியின் விராட் கோலிக்கு கேரளா & மெல்பனில் செம வரவேற்பு. கேரளாவில் கிரிக்கெட் வீரர் கோலிக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் அவருக்கு மிகப் பெரிய கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு டி20 உலக கோப்பைக்கான போட்டிகள் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் இறுதியில் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில், இந்திய அணியின் பிளேயிங் லெவனை முடிவு செய்யவும் மற்றும் அணியை வலுப்படுத்தவும் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்ரிக்காவுடன் 3 டி20 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் 2-1 என்ற வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. அடுத்ததாக தென் ஆப்ரிக்காவுடனான போட்டிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணி மற்றும் தென் ஆப்ரிக்க அணியினர் கேரளாவிற்கு சென்று உள்ளனர்.

இந்திய அணியின் விராட் கோலிக்கு கேரளா & மெல்பனில் செம வரவேற்பு

நாளை 28ம் தேதி முதல் போட்டிகள் திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். நேற்று திருவனந்தபுரம் வந்த இந்திய விரர்களுக்கு சிறப்பான வரவேற்பு செய்யப்பட்டது.

விராட் கோலிக்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. மேலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி கேரளா வந்துள்ளதால் இம்முறை பல ஸ்பெஷல் ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். குறிப்பாக சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் கட் அவுட் வைக்கப்படும். இந்த நிலையில் போட்டி நடைபெறும் கிரீன் பீல்ட் மைதானத்திற்கு வெளியே ரசிகர்கள் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு கட்டவுட் வைத்துள்ளனர்.

இதை போன்று ஆஸ்திரேலிய மெல்பனில் நடக்கவுள்ள டி20 போட்டிகளுக்காக அங்கு மெல்பன் என்ற கட்டவுட்டில் முதலாவதாக இந்திய அணியின் விராட் கோலி படம் இடம் பெற்று இருப்பது விராட் கோலியின் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஸ்ரீலங்கா, பாகிஸ்தான் வீரர்களின் படங்களும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக கோலி படம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here