INDVSAUS 1 TEST: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஓருநாள் தொடரில் பங்கு கொள்ள வந்துள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டியான பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான போட்டிகள் கடந்த 9ந் தேதி தொடங்கியது. டாஸை வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்து 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிக் கொடுத்து சிறிய இலக்கை இந்திய அணிக்கு தந்தது.
இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டகாரர்களின் விக்கெட்டுகளை சீராஜ் மற்றும் ஷமி எடுத்தனர். தொடர்ந்து ஜடேஜாவின் சுழலிலும் 5 விக்கெட்டும், அஸ்வினின் சுழலிலும் 3 விக்கெட்டும் எடுத்து தாக்கு பிடிக்க முடியாமல் திணரிய ஆஸி அனைத்து விக்கெட்களை இழந்தது.

தொடர்ந்து, ஆடி வந்த இந்திய அணியின் கேப்டன் ரோஹூத் சதம் விளாசி அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின் வந்தவர்கள் சொர்ப ரன்களில் அவுட்டாகி வெளியேறிய இந்திய அணிக்கு பல நாட்களாக ஓய்வில் இருந்து வந்த ஜடேஜாவும் அக்சரும் அரைசதம் கடந்து இந்திய அணியின் தடுமாற்றத்தை நிறைவு செய்து வந்தனர். ஜடேஜா 70 ரன்களிலும், அக்சர் 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியாக ஷமி 36 ரன்கள் குவித்து வந்த நிலையில் 400 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்த்திரேலியா அணியில் அதிகபட்சமாக டோட் பர்பி 7 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்நிலையில், 223 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணியின் இலக்கை நோக்கி ஆடி வந்த ஆஸியின் வீரர்கள் மீண்டும் ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் 90 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவிற்கு 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை தந்தது.
இந்திய அணியின் சார்பாக அஸ்வினுக்கு 5 விக்கெட்டுகளும் ஜடேஜாவிற்கு 3 விக்கெட்டுகளும் ஷமிக்கு 3 விக்கெட்டுகளும் கிடைத்தது. இதனால் ஆட்டநாயகனாக ஜடேஜாவிற்கு வழங்கப்பட்டது.
இதையும் படியுங்கள்: INDVSAUS: விராட் கோலியை முந்திய முகமது ஷமி
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.