INDVSAUS: விராட் கோலியை முந்திய முகமது ஷமி

0
6

INDVSAUS: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஓருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்நிலையில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதல் போட்டி 9ந் தேதி தொடங்கியது. ஆரம்பம் முதலே தடுமாற்றத்தை பெற்று வந்த ஆஸ்திரேலிய வீரர்கள் இந்திய சுழலில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்து 136 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர்.

இந்நிலையில், இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் ஓன்று இதுவரை 12 வருடமாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வரும் விராட் கோலி 24 சிக்ஸர்களை மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், முகமது ஷமியோ இந்த போட்டியில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு தனது டெஸ்ட் போட்டிகளில் 25 சிக்ஸர் அடித்து விராட் கோலியை முந்தினார்.

INDVSAUS: விராட் கோலியை முந்திய முகமது ஷமி

டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்ஸர்களை அடித்தவர் முன்னாள் நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம். 2004 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பிரெண்டன் மெக்கல்லம் விளையாடிய 101 டெஸ்ட் போட்டிகளில் 107 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் வீரேந்திர சேவாக். 104 போட்டிகளில் 91 சிக்ஸர்களை அடித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கூல் கேப்டன் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 78 சிக்ஸர் அடித்துள்ளார். அடுத்ததாக இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாஸ்டர் பிளாஸ்டர் 69 சிக்ஸர்களை அடித்துள்ளார். நாகாவதாக ரோஹீத் சர்மா 66 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

இந்நிலையில், இன்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் வேகபந்து வீச்சாளர் முகமது ஷமி 3 சிக்ஸர்களை பறக்கவிட்டிருந்த போது விராட் கோலியின் சாதனையை முறியடித்து முன்னேறி உள்ளார்.

இதையும் படியுங்கள்: INDVSAUS 1 TEST: அபார வெற்றி பெற்ற இந்தியா ஆட்டநாயகனாக ஜடேஜா

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here