INDVSBAN 1 TEST: இந்திய அணி வங்கதேச மண்ணில் 3 ஓருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கு பெற சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளது. 3 ஓருநாள் தொடரில் 2-1 என்ற வெற்றி கணக்கில் வங்கதேச அணி ஓருநாள் தொடரை வென்று அசத்தியது. முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியுற்று இந்திய ரசிகர்களை ஏமாற்றி வந்ததது. மூன்றாவது போட்டியிலாவது வென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் விளாயாடிய இந்திய அணி வங்கதேசத்திற்கு 410 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
வங்கதேச அணியினர் 250 ரன்களுக்குள் ஆல்வுட்ட ஆகி வெளியேறியதால் இந்தியா அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்து களம் இறங்கியது. இந்த டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய ரசிகர்களுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியினர் உள்ளனர்.
முதல் இன்னிங்ஸில் முதலாவதாக களம் இறங்கிய கேப்டன் ராகுல் 22 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார். தொடர்ந்து சுப்மன் கில் 20 ரன்கையும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 1 ரன்களும் எடுத்து இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 48 ரன்களை இந்தியா பெற்ற போது 3 விக்கெட்களை எடுத்து தடுமாறி வந்தது.

இந்திய கிரிக்கெட் கீப்பர் ரிஷிப் பந் அதிரடியாக 45 பந்துகளில் 46 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அவர் சர்வதேச அரங்கில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். இந்த டெஸ்ட் போட்டியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 278 ரன்கள் எடுத்திருந்தது. நிதானத்தை இழக்காமல் விளையாடி வந்த புஜாரா 200 பந்துகளுக்கு மேல் எதிர்கொண்டு 90 ரன்களை எடுத்திருந்த நிலையில் அவுட்டாகினார். ஸ்ரேயாஸ் அய்யர் 86 ரன்களை எடுத்து ஆட்டம் இழந்தார்.
ஆக்சர் பட்டேல் 14 ரன்களை மட்டுமே எடுத்து அவுட்டாகினார். ஆல்ரவுண்டராக விளையாடி வரும் ரவிச்சந்திர அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பார்ட்னர்ஷிப்பில் இணைந்து விளையாடி வருகின்றனர். அஸ்வீன் 81 பந்துகளில் 40 ரன்களையும் குல்தீப் 76 பந்துகளை எதிர்நோக்கி 21 ரன்களையும் உணவு இடைவேலை இருவரும் ஆட்டமிழக்காமல் ஆடி வந்துள்ளனர். இந்திய அணி 120 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்களை எடுத்து களத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்: ரஞ்சி கோப்பை: தந்தையின் சாதனையை சமன் செய்த அர்ஜூன் டெண்டுல்கர்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.