INDVSBAN 2 ODI: போராடி தோற்ற இந்தியா தொடரையும் வென்றது வங்கதேசம்

0
7

INDVSBAN 2 ODI: இந்தியா அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு 3 ஓருநாள் தொடரையும் 2 டெஸ்ட் தொடரையும் விளையாட சென்றுள்ளது. அதில் முதலாவது ஓருநாள் போட்டியில் தோல்வியுற்ற இந்தியா 2வது ஓருநாள் போட்டியில் வென்றாக வேண்டிய முனைப்பில் தொடர்ந்து விளையாடியது. ஆனால், கடைசி வரை ஆட்டமிழக்காமல் விளையாடி வந்த கேப்டன் ரோஹூத் போராடியும் தோல்வியை தழுவியது இந்திய அணி.

இதன் மூலம் 3 போட்டிகளில் 2-0 என்ற அடிப்படையில் வங்கதேசம் தொடரை வென்றுள்ளது. இரண்டாவது ஓருநாள் போட்டியில் முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்த வங்கதேச அணி தொடர்ந்து இந்திய பந்துவீ்ச்சாளர்களின் பந்துகளை எதிர் கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிக் கெடுத்து வந்தது. 19 ஓவர்களில் 69 ரன்களையும் 6 விக்கெட்டுகளையும் எடுத்து தடுமாறி வந்தது.

இறுதியாக மெகந்தி ஹாசனும் முகமதுல்லாவும் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சார்களின் பந்துகளை நின்று நிதானமாக விளையாடி முறையே ஹாசன் 83 பந்துகளில் சதம் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்து வந்தார். முகமதுல்லா 96 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டமிழந்தார்.

INDVSBAN 2 ODI: போராடி தோற்ற இந்தியா தொடரையும் வென்றது வங்கதேசம்

50 ஓவர்கள் முடிவில் 271 ரன்களை எடுத்து 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதனால் இந்திய அணிக்கு 272 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ரோஹூத் சர்மாவிற்கு விளையாட்டின் போது கட்டை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து வந்தார்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய விராட் கோலி, தவான், சுந்தர், ராகுல் என அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து இந்திய அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினர். ஸ்ரேயாஸ் அய்யர் மட்டும் நிலைத்து ஆடி வந்தார் மறுபுறம் அவருக்கு ஜோடியாக அக்சர் பட்டேல் உறுதுணையாக இருந்து வந்தார். இப்படியே சென்றால் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இந்திய ரசிகர்கள் நினைத்திருக்கையில் ஸ்ரேயாஸ் 82 ரன்களை எடுத்திருந்த போது ஹாசன் பந்து வீச்சில் வெளியேறினார்.

அக்சர் பட்டேல் 56 ரன்களில் நடையை கட்டினார். தோல்வியின் உச்சத்திற்கு வந்த இந்திய அணியின் கேப்டன் பேட்டிங் செய்ய வந்தார். அவரது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி வெற்றி பெறும் என்று நம்பி வந்த ரசிகர்களுக்கு இறுதி வரை போராடி வந்த ரோஹூத் 51 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 5 ரன்களை எடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது இந்திய அணி.

வங்கதேச பந்துவீச்சாளர்களில் எபார்ட் ஹசின் 3 விக்கெட்டுகளையும் மெகந்தி ஹாசன், கேப்டனும் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணி இந்த தொடரை வென்று அசத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: காலிறுதிக்கு தகுதி பெற்றது குரோஷி மற்றும் பிரேசில் அணி

இந்திய அணியால் அந்நிய மண்ணில் தொடரை கைப்பற்ற முடியாது என்ற விமர்சனத்திற்கு விடை கிடைக்காமல் சாபம் போல தொடர்ந்து வருகிறது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here