INDVSBAN 2 TEST: இந்திய அணி வங்கதேசத்திற்கு பயணம் மேற்கொண்டு 3 ஓருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளை பங்கு பெற்று வருகிறது. இதில் ஓருநாள் தொடரை 2-1 என்ற வெற்றி கணக்கில் வங்கதேசம் வெற்று பெற்றது. டெஸ்ட் தொடரையாவது பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி வங்கதேசத்தை 188 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முன்னிலையில் உள்ளது.
இன்று மிர்பூரில் 2வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸை வென்ற வங்கதேசம் முதலாவதாக பேட்டிங் செய்தவாக நிர்ணயித்து விளையாடியது. இதில் வங்கதேச அணியினர் சொற்ப ரன்களில் ஆட்டத்தை இழந்து தடுமாற்றம் அடைந்து வந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக மோகினல் ஹக் மட்டும் இந்திய அணியினரின் பந்துகளை நிதானமாக ஆடி 84 ரன்களை சேர்த்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களையே எடுத்திருந்தனர்.
மூன்றாவது அமர்வில் வங்கதேச அணியினர் அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. 73.5 ஓவர்கள் விளையாடியுள்ள வங்கதேச அணி 227 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் மற்றும் சூழல் பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆகிய இருவரும் தலா 4 விக்கெட்டுகளை எடுத்தனர். உனத்கட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆடி வந்தனர். ராகுல் 30 பந்துகளை எதிர்நோக்கி 3 ரன்களையும், சுப்மன் கில் 20 பந்துகளை எதிர்நோக்கி 1 பவுன்டரி 1 சிக்சஸருடன் 14 ரன்களை எடுத்திருந்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் 8 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் இந்திய அணி 19 ரன்களை எடுத்திருந்த போது ஆட்டம் முடிக்கப்பட்டது. 2ம் நாள் ஆட்டம் இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு தொடங்கும்.
தற்போதைய நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா 76.92 வெற்றி சதவீத புள்ளிகள் முதலிடத்தில் உள்ளது. இந்தியா 55.77 சதவீத புள்ளிகளுடன் 2-வது இடம் வகிக்கிறது. ஆஸ்திரேலிய அணியிடம் காபாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்ததால் அந்த 2-வது இடத்தில் இருந்து 54.55 சதவீத புள்ளிகளுடன் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதன் காரணமாக இந்திய அணி 2-வது இடத்துக்கு முன்னேறி இருந்தது.
இன்று நடைபெற்று வரும் வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டித் தொடரும் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது. இந்த ஆட்டங்களில் வெற்றி கண்டால் மட்டுமே 2-வது முறையாக ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணியால் தகுதி பெற முடியும்.
இதையும் படியுங்கள்: கால்பந்தாட்ட வீரர் மெஸ்ஸியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சொத்து மதிப்பு
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.