INDVSBAN 2 TEST: வங்கதேச மண்ணில் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வென்று முன்னிலையில் உள்ளது. தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது போட்டியிலும் வென்று கோப்பையை வெல்ல முனைப்புடன் விளையாடி வரும் வேலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 227க்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது.
தொடர்ந்து ஆடி வந்த இந்திய அணி 314 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடி வந்த வங்கதேச அணி வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். வங்கதேச அணியின் சார்பில் அதிகபட்சமாக ஸகிர் ஹசன் 51 ரன்களை எடுத்தார். லிதன் தாஸ் 73 ரன்களை எடுத்து வங்கதேசத்திற்கு நல்ல முன்னேற்றத்தை வழங்கினர். இவர்களை தொடர்ந்து டஸ்கின் அகமது சிறப்பாக விளையாடி 31 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
வங்கதேசம் 70 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 231 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பில் ஆக்சர் பட்டேல் 3, அஸ்வின் மற்றும் சிராஜ் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனால், இந்தியா 140 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி பயணத்தை தொடர்தது. ஆரம்பத்திலேயே இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 2 ரன்களில் சகிப் அல் ஹாசனிடம் விக்கெட்டை இழந்தார். சுப்மன் கில்லும் 7 ரன்களில் மெஹந்தி ஹாசனிடம் வீழ்ந்தார். புஜாரா 6, விராட் கோலி 1 என்ற சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து தடுமாறி வந்தது.
அடுத்ததாக களமிறக்கப்பட்ட ஆக்சர் பட்டேல் மட்டும் நிதானமாக ஆடி வந்த நிலையில் அவர் 26 ரன்களை எடுத்துள்ளார். மறுமுனையில் உனத்கட் 3 ரன்களை அடித்த நிலையில் ஆட்டமிழக்காமல் 3 ஆம் நாள் முடிவில் 23 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் 45 ரன்களை மட்டுமே எடுத்து 4 முக்கிய வீரர்களை இழந்து இந்திய அணி தடுமாறி வருகிறது.
இதையும் படியுங்கள்: IPL MINI AUCTION: ஐபிஎல் மினி ஏலம் பற்றிய சுவாரசிய தகவல்கள்
வங்கதேச அணியின் வேகபந்து வீச்சாளரான மெஹந்தி ஹாசன் 3 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியினரை மிரட்டி வருகிறார். நாளை நடக்கும் போட்டியில் 6 விக்கெட்டுகள் மீத இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற 100 ரன்கள் தேவை. இந்நிலையில் முக்கிய வீரர்கள் தடுமாற்றத்தை சந்தித்து வருவது இந்திய அணிக்கு பெரும் ஆபத்தாக கருதுகின்றனர் ரசிகர்கள்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.