INDVSBAN 2 TEST: 2ம் நாள் முடிவில் இந்திய அணி 314 ரன்களை சேர்த்தது

0
6

INDVSBAN 2 TEST: வங்கதேசத்திற்கு சென்றுள்ள இந்திய அணி 3 ஓருநாள் தொடர் 2 டெஸ்ட் தொடர்களை தொடர்ந்து விளையாடி வருகிறது. அதில் ஓருநாள் தொடரை வங்கதேச அணி வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 188 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றது. தற்போது 22ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதில் டாஸை வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து சொதப்பிய அந்த அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களை எடுத்து ஆட்டமிழ்ந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக சாண்டோ 24, ஜாகிர் ஹசன் 15, கேப்டன் சாகிப் அல் ஹசன் 16, ரஹீம் 26 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் 84 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் 227 ரன்களை மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் எடுத்தது.

அடுத்ததாக இந்திய அணியின் தொடக்க வீரர்களான ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் 8 ஓவர்களில் 20 ரன்களை எடுத்து முதல் நாள் முடித்தனர். இன்று தொடர்ந்து விளையாடி வந்த இந்திய அணி வீரர்களான ராகுல், கில், கோலி, புஜாரா ஆகிய சீனியர் வீரர்கள் அவுட்டாகி இந்திய அணிக்கு ஏமாற்றத்தை தந்த நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பந்த் மற்றும் ஸ்ரேயாஸ் நல்ல பார்ட்னர்ஷிப்பை வழங்கி இந்திய அணியின் ரன்களை உயர்த்த போராடினர்.

INDVSBAN 2 TEST: 2ம் நாள் முடிவில் இந்திய அணி 314 ரன்களை சேர்த்தது

அதிகபட்சமாக ரிஷப் பந்த் 7 பவுன்டரி 5 சிக்ஸர்களுடன் 93 ரன்களை எடுத்திருந்த போது அவுட்டாகி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தார். இவர் சதம் அடித்து இந்திய அணிக்கு விருந்தளிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஆட்டமிழ்ந்தார். மறுபுறம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 10 பவுன்டிரி 2 சிக்ஸ்ருடன் 87 ரன்களை எடுத்த போது அவுட்டாகினார்.

இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 314 ரன்களுக்கு அவுட்டான இந்தியா 87 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் வங்கதேசம் 7/0 ரன்கள் எடுத்த போது 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக சாகிப் அல் ஹசன் மற்றும் டைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்களை சாய்த்தனர்.

இதையும் படியுங்கள்: ipl auction 2023: சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ரஹானே

இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் முடிவில் இறுதியாக வந்த வங்கதேச அணி  வீரர்கள் 6 ஓவர்கள் முடிவில் 7 ரன்களை மட்டுமே எடுத்தது.

இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here