INDVSBAN 3 ODI: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி 3 ஓருநாள் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் 2 ஓருநாள் தொடர்களில் இந்தியா தோல்வியுற்று இந்திய ரசிகர்களை ஏமாற்றியது. இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அவர்களின் எதிர்பார்ப்புக்கு பதிலாக அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் வங்கதேசத்திற்கு பதிலடி கொடுத்து ஆறுதல் வெற்றியை பெற்றது.
வங்கதேசம் ஓருநாள் தொடரை கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நடந்த 3வது ஓருநாள் போட்டியில் பல சாதனைகளை நிகத்தியது இந்திய அணி. சட்டோக்ராம் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்ய வங்கதேசம் அறிவுறுத்தியது.
முதலாவதாக களம் இறங்கும் ராகுலுக்கு பதில் இஷான் கிஷான் இறக்கப்பட்டார். ஆரம்பத்திலேயே தவான் ஆட்டமிழக்க இந்திய ரசிகர்கள் ஆரம்பித்து விட்டார்கள் விக்கெட் இழப்பை என்று சோகம் அடைந்த தருணத்தில் புயலென மாறிய இஷான் கிஷான் தனது முதல் ஓடியை சதத்தை பதிவு செய்தார். பின்னர் எதிரணியினரின் பந்துகளை பறக்கவிட்ட இஷான் 126 பந்துகளில் இரட்டை சதம் விளாசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அவர் 24 பவுன்டரி, 10 சிக்சர்களும் 210 ரன்கள் அடித்த போது ஆட்டமிழந்து வெளியேறினார்.

அடுத்ததாக, மறுபுறம் கோலி தனது நிலையான ஆட்டத்தால் 85 பந்துகளில் தனது 72 வது சதத்தை பதிவு செய்து பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக ஆனார்.இவர் 11 பவுன்டரி 2 சிக்சருடனும் 113 ரன்களை கடந்த போது பவுன்டரி லைனில் இருந்த பீல்டரிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
வாசிங்டன்சுந்தர் 37 ரன்களுடனும் அக்சர் பட்டேல் 20 ரன்களையும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 409 ரன்களை பதிவு செய்தது. வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது, எபாத் ஹெசைன், சகிப்அல் ஹாசன் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளை எடுததிருந்தனர்.
410 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய வங்கதேச வீரர்கள் இந்திய பவுலர்களின் பந்துவீச்சில் சிதறினர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 29, சகிப் அல் ஹாசன் 43, யாசர் அலி 25, முகமதுல்லா 20, டஸ்கன் அகமது 17 என சொற்ப ரன்களையே எடுத்தனர். இறுதியாக 34 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது வங்கதேசம்.
இதையும் படியுங்கள்: ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டையும் உம்ரான் மாலிக், அக்சர் பட்டேல் ஆகியோர் 2 விக்கெட்களை எடுத்திருந்தனர். இதனால் இந்திய அணி 3வது போட்டியில் வென்று ஆறுதல் அடைந்துள்ளது. இந்த போட்டியில் 409 ரன்களை அடித்துள்ள இந்திய அணி இதோடு 4 முறை ஓருநாள் போட்டியில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்த இஷான் கிஷான்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.