INDVSBAN TEST: முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 404 ரன்களை குவித்துள்ளது. வங்கதேச அணியின் ஆட்டக்காரர்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்தை அடைந்துள்ளனர். இரண்டாம் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களுக்கு 133 ரன்களை எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான ஓருநாள் போட்டியில் தொடரை கைப்பற்றி அசத்திய வங்கதேசத்திற்கு டெஸ்ட் தொடரை வென்று சமன் செய்ய இந்தியா திட்டமிட்டு விளையாடி வருகிறது. டாசை வென்ற இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய திட்டமிட்டது.
முதலாவதாக களமிறங்கிய ராகுல் 22 ரன்களும் சுப்மன் கில் 20 ரன்களும் விராட் கோலி 1 ரன்களையும் எடுத்து இந்திய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தினர். பின்னர் வந்த புஜாரா வலுவான தடுப்பாட்டத்தை உறுதி செய்து 203 பந்துகளுக்கு 90 ரன்களை குவித்து ஆட்டமிழ்ந்தார். எதிர்முனையில் நிதானத்துடன் ஆடிவந்த ஸ்ரேயாசும் 86 ரன்களில் ஆட்டமிழ்ந்தார். சதம் விளாசுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வெளியேறினார்.

ரிஷப்பந்த் தனது டெஸ்ட் போட்டியில் அதிரடி காட்டி 46 பந்துகளில் 45 ரன்களை அடித்து வெளியேறினார். அக்சர் பட்டேல் 14 ரன்களை எடுத்திருந்தார். இறுதியாக கைகோர்த்த தமிழக ஆல்ரவுண்டரான அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் பார்ட்னர்ஷூப்பில் அரைசதம் கண்டனர்.
அஸ்வின் தனது அரைசதத்தை பதிவு செய்து 58 ரன்களை எடுத்திருந்த போது அவுட்டாகினார். குல்தீப் யாதவும் 40 ரன்களை கடந்த போது ஆட்டமிழ்ந்தார். பின்னர் வந்த சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இறுதியாக 133 ஓவர்களை கண்ட இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்களை குவித்தது.
வங்கதேச அணியில் தைஜூஸ் இஸ்லாம் மற்றும் மெஹந்தி ஹாசன் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.
தொடர்ந்து ஆட்டத்தை தொடர்ந்த வங்கதேசத்திற்கு இந்திய அணி சார்பில் வேகபந்து வீச்சாளரான சிராஜின் பந்தில் அவர்களது ஆட்டம் எடுபடவில்லை. தொடர்ந்து விக்கெட்டுகளை பறிக் கொடுத்து வந்தனர். வங்கதேச அணியில் அதிகபட்சமாக யசிர் அலி 24, முஷ்குபிர் ரகுமான் 28 எடுத்தனர்.
இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 44 ஓவர்களுக்கு வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை மட்டுமே சேர்த்தது. களத்தில் மெஹந்தி ஹாசனும் எபாத் ஹாசனும் இருந்து வருகின்றனர். இந்திய தரப்பில் முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் முறையே 3, 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP: 6வது முறையாக இறுதி போட்டியில் அர்ஜென்டினா
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.