INDVSBAN: வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்வதுடன் விமர்சனத்திற்கும் ஆளாகி உள்ளது. முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி இரண்டவாது போட்டியில் வங்கதேச அணிக்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கேப்டன் ரோஹூத், ஸ்ரேயாஸ், அக்சர் படேலின் அரைசதங்கள் வீணாகி இந்திய அணி போராடி இறுதியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த தொடரில் முதல் போட்டியில் வேகபந்து வீச்சாளராக இறங்கிய குல்தீப் சென் காயம் காரணமாக விலகினார். இரண்டாவது போட்டியில் 3 ஓவர்கள் மட்டுமே வீசிய தீபக் சாஹரும் காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டு வெளியேறினார். இந்த நிலையில் கேப்டன் ரோஹூத் சர்மாவிற்கு பீல்டிங்கின் போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டதால் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தார் இந்திய அணியில் பேட்டர்கள் தொடர்ந்து அவுட்டாகி வெளியேறியதை பார்த்த ரோஹூத் இறுதியாக களம் இறங்கி வெற்றி பாதைக்கு அழைத்து செல்ல பாடுப்பட்டார்.
இருப்பினும் அவர் அதிரடியாக விளையாடி 28 பந்துகளில் 51 ரன்களை விளாசி இருந்தார். ஆனால், வெற்றிக்கு தேவையான 5 ரன்களை எடுக்க முடியாமல் இந்திய அணி 2வது போட்டியிலும் தோல்வியுற்றது. இதனால் ரசிகர்கள் கவலை கொண்டனர். வங்கதேச அணி இரண்டு ஓருநாள் தொடரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது.
வருகிற 3வது ஓருநாள் போட்டி நாளை 10ந் தேதி தாக்காவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கேப்டன் ரோஹூத், குல்தீப் சென், தீபக் சாஹர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: காலிறுதி போட்டியின் முழு அட்டவணை
இந்திய அணி இந்த போட்டியில் வென்று ஆறுதல் வெற்றியையாவது பெறுமா என ரசிகர்கள் எதிர் பார்த்து இருக்கின்றனர். அதேபோல வங்கதேச அணியும் மூன்று போட்டிகளையும் வென்று இந்திய அணியை ஓயிட்வாஷ் செய்து வெற்றி பெறும் நோக்கில் இருந்து வருகிறது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.