INDVSNZ T20: நியூசிலாந்து அணி 3 ஓருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் ஓருநாள் தொடரை முழுவதுமாக இந்தியா பெற்ற நிலையில் டி20 தொடரை பெற கடுமையான போட்டி நிலவியது. முதல் டி20 போட்டியில் நியூசி வெற்றி பெற இந்திய அணிக்கு இக்காட்டான நிலை நிலவியது. தொடர்ந்து 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சமனில் இருந்தது. 3வது டி20 போட்டி இரு அணியின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் மைதானத்தில் அனல் பறந்தது.
முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியின் தொடக்க ஆட்டகாரரான சுப்மன் கில் தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்தார். மேலும், ரோஹூத் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றோரின் சாதனைகளுடன் கில் இணைந்துள்ளார். சர்வதேச மூன்று விதமான போட்டிகளிலும் சதம் அடித்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இளம் வயதில் சதம் விளாசிய ரெய்னாவின் சாதனையை முறியடித்து முதல் இடம் பிடித்தார். ரெய்னா தென்னாப்பிரிக்காக்கு எதிராக தனது முதல் டி20 சதத்தை பதிவு செய்து இளம் வயது சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருந்தார் அதை இப்போது முறியடித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த விராட் கோலியின் சாதனையை முறியடித்து முதல் இடத்தையும் தன் வசமாக்கினார். கோலி இதற்குமுன் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டியில் 122 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச தனிநபர் ஸ்கோராக இருந்தது. இந்நிலையில், சுப்மன் கில் 126 ரன்களை பதிவு செய்து முதல் இடத்தை பெற்றார். இருவருமே இறுதி வரை அட்டமிழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்துக்கு எதிராக விளையாடிய டி20 போட்டியில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 234|4 இதுவாகவும் பதிவாகியுள்ளது. டி20 போட்டியில் கில் தனது முதல் சதத்தை பதிவு செய்து இந்திய அணி வெற்றி பெற உதவினார். இந்த டி20 3வது போட்டியில் 63 பந்துகளில் 126 ரன்களை குவித்தார் இதில் 7 சிக்ஸர்கள் 12 பவுண்டரிகளும் அடங்கும்.
இந்த கடினமான இலக்கை எதிர்கொண்ட நியூசிலாந்து வீரர்கள் இந்திய அணியின் பவுலிங்கை தாக்குப் பிடிக்க முடியாமல் 12 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிக் கொடுத்து தோல்வியடைந்தது. இந்திய தரப்பில் கேப்டன் ஹர்திக் 4 விக்கெட்டுகளையும், உம்ரான் 2, ஷிவம் மாவி 2 என விக்கெட்டுகளை எடுத்தனர். இதனால் தொடரின் ஆட்டக்காருக்கான பரிசை ஹர்திக் பெற்றார். போட்டியின் சிறந்த ஆட்டக்காருக்கான பரிசை சுப்மன் கில் பெற்றார்.
இதையும் படியுங்கள்: மகேந்திர சிங் தோனி தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்கும் லவ் டுடே நாயகி இவானா
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.