INDVSSL: இலங்கை அணி இந்தியா வந்துள்ள நிலையில் டி20 தொடரை இந்தியா வென்றது. இதில் 2-1 என்று வெற்றி பெற்றது. இன்று நடந்த இலங்கைக்கு எதிரான ஓருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் தனது 45வது சதத்தை பதிவு செய்த விராட் கோலி இதன் மூலம் சச்சின் சாதனையை சமன் செய்துள்ளார்.
கௌவுகாந்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக பேட்டிங் செய்த இந்திய அணியின் வீரர்கள் அதிரடியாக அடித்து 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 373 ரன்களை குவித்து இலங்கைக்கு கடினமான இலக்கை நிர்ணயித்து உள்ளது.
இந்த போட்டியில் கேப்டன் ரோஹூத் சர்மா 9 பவுண்டரி 3 சிக்சருடன் 83 ரன்களை குவித்திருந்தார். சுப்மன் கில் 11 பவுன்டரிகளுடன் 70 ரன்களையும் முன்னாள் கேப்டன் விராட் கோலி 12 பவுன்டரி 1 சிக்ஸருடன் 112 ரன்களை குவித்தார். இலங்கை அணியின் பவுலர் அதிகபட்சமாக கசுன் ராஜித் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்நிலையில், விராட் கோலி தனது 45 வது சதத்தை பதிவு செய்தார். இவரின் சதத்தால் சச்சினின் சாதனை சமன் செய்யப்பட்டுள்ளது. சச்சின் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் 20 சதம் விளாசி முன்னிலையில் இருந்தார் தற்போது இந்த சாதனையை விராட் கோலி இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் சமன் செய்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் சொந்த மண்ணில் இதுவரை 164 போட்டிகளில் 20 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி 102 போட்டிகளில் 20 சதங்களில் இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
மேலும், இலங்கைக்கு எதிராக அதிகபட்ச சதங்களை டெண்டுல்கர் மற்றும் கோலி தலா 8 சதங்களை அடித்திருந்த நிலையில் இந்த போட்டியில் அடித்த சதத்தின் மூலம் டெண்டுல்கரை முந்திவுள்ளார்.
இதையும் படியுங்கள்: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சாதனைகளை அள்ளி வரும் ஸ்கை
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முறையே 9 சதங்களுடன் கோஹ்லி மற்றும் டெண்டுல்கர் ஆகியோர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.