INDVSSL T20: இலங்கை அணி 3 டி20 தொடர் மற்றும் 2 ஓருநாள் தொடரில் பங்கேற்க இந்தியா வந்துள்ள நிலையில் முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-1 என்ற சமநிலையில் இரு அணிகளும் உள்ளது.
இந்திய அணி 57 ரன்களில் 5 விக்கெட் இழப்பிற்கு தடுமாறி வந்த நிலையில் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் பட்டேல் இந்திய அணிக்கு பலமாக இருந்து வந்தனர். இருவரும் அரைசதம் பெற்று இந்திய அணியின் மானத்தை காப்பாற்றினர். இருவரும் அதிரடியாக அரைசதம் கடந்து ஆட்டத்தை போக்கை மாற்றிய போதும் விக்கெட்டை இழந்ததால் இந்திய அணி தோல்வியை சந்திக்க வேண்டியதாயிற்று.
முதலில் டாஸை வென்ற இலங்கை பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது. பவர் ப்ளேயிலேயே இலங்கை அணி 55 ரன்களை எடுத்து அணியை வலுப்படுத்தியது. தொடர்ந்து விக்கெட் இழந்த நிலையிலும் ஷனாகா 56, குசல் மெண்டிஸ் 52, ஹசரங்கா 37 எடுத்தனர். இறுதியாக 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்களை இலங்கை அணி எடுத்தது.

இந்திய அணியின் சார்பாக உம்ரான் மாலிக் 3, அக்சர் பட்டேல் 2, சஹல் 1 என்று விக்கெட்டை எடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்கள் விரைவாக விக்கெட்டை பறிக்கொடுத்தனர். ஹர்திக் பாண்டியா நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 12 ரன்களில் அவுட்டாகி இந்திய அணிக்கு ஏமாற்றத்தை பதிவு செய்தார்.
இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு பின் கூட்டணி அமைத்த யாதவ் மற்றும் அக்சரும் அதிரடியாக அரைசதம் அடித்து இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்து வந்தனர். யாதவ் 51 ரன்களில் ஆட்டமிழக்க சிவம் மாவி வந்து அவரது பங்கிற்கு 26 ரன்களை பறக்க விட்டார். அக்சரும் 65 ரன்களில் அவுட்டாகினார். இறுதியாக இந்திய அணி 190 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 16 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.
இதையும் படியுங்கள்: யார் இந்த பீலே பிரேசில் கால்பந்து கடவுளாக பார்க்க காரணம் என்ன?
இலங்கை அணியில் மதுஷங்கா 2, ரச்சிதா 2, ஷனாகா 2 என விக்கெட்டுகளை எடுத்திருந்தனர். இந்திய அணியினர் எக்ஸ்டாராஸில் அதிக ரன்களை வாரிக் கொடுத்திருந்தது ரசிகர்களை வெறுப்பு அடைய செய்துள்ளது.
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.