வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி உள்ள நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ம் தேதி வெளியாகிறது.
இயக்குனர் வம்சியுடன் இணைந்து இப்படத்தை நடித்து முடித்துள்ளார் விஜய் தெலுங்கில் வாரிசுடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் பீஸ்ட் படத்திற்கு பிறகு வெளியாவதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். இதற்கிடையே விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளையும் சூட்டோடு சூடாக சந்தித்து அவர்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று வருகிறார்.
இந்நிலையில் வாரிசு படம் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அனைத்தையும் சரிகட்டி திரையரங்குகளுக்கு பொங்கல் திருவிழாவினை அலங்கரிக்க உள்ளது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், பிரகாஷ் ராஜ், யோகி பாபு, ஷாயாம் உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்ற இவ்வேலையில் தொடர்ந்து விஜயின் பிறந்தநாள் அன்று முதல் பாடலான ரஞ்சிதமே பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகின்றது.

அடுத்ததாக சிலம்பரசன் பாடிய தீ தளபதி பாடலும் மாஸாக அமைந்துள்ளது. சமீபத்தில் 3வது பாடலான அம்மா பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றது. இப்படாலை சின்னகுயில் சித்ரா பாடியுள்ளார். முழுக்க மழுக்க குடும்ப படமாக இருக்கக் கூடும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற டிசம்பர் 24ந் தேதி சென்னனையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கத்தில் இதற்கான ஏற்பாடுகள் சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு குட்டி ஸ்டோரி சொல்லுவது வழக்கம் அந்த குட்டி ஸ்டோரியை கேட்க அவரது ரசிகர்கள் மிகுந்த அர்வத்துடன் காணப்படுகின்றனர். இதற்கு முன் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது அவர் சொன்ன குட்டி ஸ்டோரி ரசிர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த இசை வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்குபவர் யார் என்று தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் சீசன் 5ல் வந்த ராஜ் அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இது குறித்து தெரிவித்திருந்தார். பின்னர், அந்த பதிவை நீக்கி விட்டார் எனவே இது குறித்த அதிகாரப் பூர்வ அறிவிப்பு வரும் போது யார் தொகுப்பாளர் என்பது தெரிய வரும். இதனிடையே வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவினை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: லத்தி பட வருவாயில் மாணவர்கள் விவசாயிகளுக்கு செலவு-விஷால்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.