புல்புல் என்னும் கொண்டைக்குருவி பற்றிய சுவாரசிய தகவல்கள்

0
11

புல்புல் என்னும் கொண்டைக்குருவி பற்றிய சுவாரசிய தகவல்களை இப்பதிவில் விரிவாக பார்ப்போம்.

உலகத்தில் தோன்றிய அனைத்து உயிரினங்களும் மிக அழகானது அறிவானது உயர்வானது. இயற்கை அளித்த கொடை என்றே சொல்லலாம். அவ்வகையில் சிறிய உடல் அமைப்பினையும் அனைத்து பாகங்களும் மிக சிறியதாக பெற்று நம்மை கவரும் பறவையினங்களின் அழகே அழகு. இயற்கைக்கு ஏற்றார் போல பலப்பல பறவைகள் உலகெங்கிலும் உண்டு அவை வாழும் இடங்களுக்கு தகுந்தார் போல பெயர் வேறாக இருக்குமே தவிர செயல்பாடுகள் அனைத்தும் ஓன்று.

இன்று பரபரப்பாக பேசப்படும் புல்புல் பறவை கர்நாடக புத்தகத்தில் இடம் பெற்று சர்ச்சை ஆனதால் பெருவாரியாக பேசப்படுகிறது. சரி நமக்கு அந்த அரசியல் தேவை இல்லை.

புல்புல் பறவையை நம் தமிழ் முன்னோர்கள் எப்படி அழைத்தார்கள் அதன் பெயர் மற்றும் அது சார்ந்த செய்திகளை இத்தொகுப்பில் விரிவாக பார்போம்.

இதையும் தெரிந்து கொள்க: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடலுக்கான விளக்கம்

புல்புல் என்னும் கொண்டைக்குருவி பற்றிய சுவாரசிய தகவல்கள்
 • புல்புல் பறவையை தமிழில்  ‘கொண்டைக்குருவி‘ என்பர்.
 • இது புல்புல் என்னும் குருவி இனத்தை சேர்ந்த பறவையாகும்.
 • செம்மீசைச் சின்னான் அல்லது சிவப்புமீசைச் சின்னான் அல்லது செம்மீசைக் கொண்டைக்குருவி என்பது சின்னான் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பாடும் பறவையாகும்.
 • பாடும் பறவையில் குயிலுக்கு அடுத்ததாக உள்ள பறவை இந்த புல்புல் இனத்தை உடைய கொண்டைக்குருவி.
 • கொன்டைக்குருவி (bulbul) பைக்னோனோடிடே குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர அளவிலான, பாடும் பறவைகளின் வரிசையில் உள்ள ஓர் குருவி இனத்தைச் சேர்ந்த பறவையாகும்.
 • அழகான குரல் படைத்த குருவியை நைட்டிங்கேல் (NIGHTINGALE) என்பர். நைட்டிங்கேல் என்பதை இந்தியில் புல்புல் (bulbul) என்றழைப்பர்.
 • இந்தப் பறவைக் குடும்பம் ஆப்பிரிக்காவின் பெரும்பகுதி மற்றும் மத்திய கிழக்கு, வெப்பமண்டல ஆசியாவிலிருந்து இந்தோனேசியா மற்றும் வடக்கே ஜப்பான் வரை பரவியுள்ளன.
 • இந்த வன உயிரினங்கள் பச்சைக் கொண்டைக்குருவி, பழுப்புக் கொண்டைக்குருவி, இலைவிரும்பி, அல்லது முள்மயிர்க்குருவி ஆகியவை இவ்வினத்தால் அறியப்படுகின்றன.
 • 27 பேரினங்களில் 150 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன. இவற்றில் வெவ்வேறு வகையான பல்வேறு இனங்கள் பரவலான வாழ்விடங்களில் காணப்படுகின்றன, ஆப்பிரிக்க இனங்கள் பெரும்பாலும் மழைக்காடுகளில் காணப்படுகின்றன.
 • கொண்டைக்குருவிகள் குறுகிய கழுத்து கொண்ட மெல்லிய பாடும் பறவைகள் ஆகும். இவற்றின் வால்கள் நீளமாகவும், இறக்கைகள் குறுகியதாகவும் வட்டமாகவும் இருக்கும்.
 • இவை உணவாக கொய்யா மற்றும் அரச மரத்தில் உள்ள பழங்கள் புழு, தேன், பூச்சிகளை உட்கொள்ளும் இயல்புடையதாக உள்ளது.
 • இதன் வண்ணங்கள் சிகப்பு, மஞ்சள், கருப்பு, நீலம், வெள்ளை உடையது.
 • இதன் நீளம் 13 முதல் 29 சென்டி மீட்டர் வரையும், எடையானது 13.3 லிருந்து 93 கிராம் வரை உள்ள ஓரு சிறிய பறவை இனமாக உள்ளது.
 • மனிதர்கள் வாழும் வீட்டில் பயம் கொள்ளாமல் கூடுகட்டி வாழும் இயல்புடையது.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு கழகம் (ICUN) வெளயிடும் சிவப்பு பட்டியலில் (red List) அழிவுக்கான அச்சுறுத்தல் அதிகமாக உள்ள அரிய வகை பறவை இனமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற தகவல்களுக்கு மற்றும் ஆன்மீகம், தமிழ் இலக்கியம், அறிவியல், கடி ஜோக்குகள், ஜோதிடம், செய்திகள் என அனைத்து தகவல்களையும் பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here