டெல்லி ஓட்டலில் ‘மோடி’ சிறப்பு உணவுத் தட்டு அறிமுகம்

0
13

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி டெல்லி தனியார் உணவகத்தில் 56 வகையான உணவு பதார்த்தங்களுடன் உணவு அறிமுகம். அந்த தட்டு நிறைய உணவை 40 நிமிடங்களில் முழுவதுமாக முதல் முறை உண்டு காலி செய்பவர்களுக்கு ரூ 8.5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் கேதார்நாத் பயணத்திற்கு அனுப்பி வைக்கவும் திட்டம்.

பிரதமர் மோடியின் பிறந்த நாளான செப்டம்பர் 17ம் தேதி பாரதிய ஜனதா சார்பில் பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக திட்டங்களை செய்ய திட்டமிட்டுள்ளது. உலக நாடுகே வியந்து போற்றும் அளவில் இந்திய பாரத பிரதமர் அவர்களின் பல  செயல்பாடுகள் அமைந்துள்ளது.

வரும் 17-ம் தேதி பிரதமர் மோடி பிறந்த நாளன்று அக்.02 ம் தேதி வரை 15 நாள் ”வேற்றுமையில் ஒற்றுமை” தினமாக கொண்டாட பா.ஜ., முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நாளை பாஜகவினர் சேவை தினமாக ஆண்டுதோறும் 15 நாட்கள் கொண்டாடி வருகின்றனர்.

டெல்லி ஓட்டலில் ‘மோடி’ சிறப்பு உணவுத் தட்டு அறிமுகம்

வரும் 17ல் துவங்கும் சேவை தினம், மகாத்மா காந்தி பிறந்த தினமான அக்., 2ல் முடிவுக்கு வருகிறது. ரத்த தானம், குடிநீர் சேமிப்புக்கான விழிப்புணர்வுடன் இந்த ஆண்டு மாவட்டம் தோறும், ‘வேற்றுமையில் ஒற்றுமை’ திருவிழாவுக்கு பா.ஜ.,வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

இதையும் படியுங்கள்: ஜி20 அமைப்புக்கு தலைமை ஏற்கும் இந்தியா

கடந்த வருடம் பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை (செப்.17) நாட்டுக்கே சமூக நீதி தினம் என கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மோடி பிறந்த நாளை இன்று முதல் அக்டோபர் 7-ம் தேதி வரை சேவை மற்றும் சமர்ப்பண தினமாக கொண்டாடுகிறோம். பெண்களின் ஆரோக்கியத்தை முன்னிறுத்தி மாதந்தோறும் 10 ஆயிரம் பெண்களுக்கு வீடுகளுக்கே சென்று நாப்கின் வழங்குதல் மற்றும் 2 ஆயிரம் பெண்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்திலிருந்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் இயங்கி வரும் தனியார் ஓட்டல் ஓன்றில் மோடி உணவு தட்டு ஓன்றை அறிமுகப்படுத்தி அதை முழுவதுமாக 40 நிமிடத்தில் காலி செய்பவர்களுக்கு பரிசையும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here