வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்கான செயலி அறிமுகம்-அமைச்சர்

0
8

வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்பவர்கள் பலவித இன்னலுக்கு உட்படுத்த படுகிறார்கள் அவர்களின் துயரங்களை போக்க வெளிநாடுகளுக்கு செல்லும் நபர்கள் செயலி மூலம் பதிவு செய்தால் நல்ல ஓப்பந்தத்தின் வாயிலாக செல்ல அறிவுறுத்தப்படும். இதற்கான செயலியை தமிழக அமைச்சர் வெளிநாடு வாழ் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

தமிழத்தில் போலி ஓப்பந்ததாரர்களை நம்பி பலர் பலவித பணிகளுக்கு செல்கின்றனர். ஆனால், அங்கு அவர்களுக்கு ஏற்ற பணிகளை வழங்காமல் அவர்களை சமூக விரோத செயல்களில் ஈடுப்படுத்தப்படுகின்றனர். மேலும், பலவித பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அவர்களை தாயகம் திரும்ப செய்வதிலும் பல பிரச்சனைகள் அரசுக்கு எழுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் விதமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் ஓரு செயலி ஏற்படுத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி அந்த செயலியில் வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தங்கள் முழுவிபரத்தையும் பதிவு செய்தால் தகுந்த உண்மையான ஓப்பந்ததாரர்கள் மூலம் பணிக்கு அறிவுறுத்தப்படும். எனவே வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் அங்கு சரியான பணியை செய்யலாம். இதனால் போலி ஓப்பந்த தாரர்களிடம் இருந்து விடுப்படலாம்.

வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்கான செயலி அறிமுகம்-அமைச்சர்

சமீபகாலமாக பல வெளிநாடுகளில் பலர் பலவித துன்பங்களை அனுபவித்து எப்படியாவது தாயகம் திரும்பினால் நல்லது என்று எண்ணி அரசுக்கு சமூக வலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதன் காரணமாக பலர் மீட்கப்பட்டனர். இது போன்ற போலி ஓப்பந்ததாரர்களை அடையாளம் காட்டும் விதமாக பல போலி விளம்பரங்களை நம்பி ஏமாராமல் அரசு தரும் செயலி மூலம் பதிவு செய்து தரமான பணிகளை நாடி சென்றால் எல்லா வித உதவிகளையும் அரசும் ஏற்று நடத்தி தரும்.

இதையும் படியுங்கள்: இந்தோனிசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை உயர்வு

வெளிநாடுகளுக்கு தமிழ்நாட்டில் இருந்து வேலை பார்க்க செல்பவர்களுக்கு, பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் தவறான ஏஜென்சிகளால் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக் கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது போன்ற பலவித தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here