உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளார் சென்னையை சேர்ந்த 13 வயது மாணவர் பிரதீக். ரஃபி என்ற பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கும் நீங்கள் அந்த ரோபோவைத் திட்டினால் நீங்கள் மன்னிப்பு கேட்கும் வரை உங்களுக்கு பதில் அளிக்காது என கூறுகிறார் பிரதீக்.
மனித வாழ்க்கையில் தொழில் நுட்பங்கள் வாயிலாக நாம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. கையடக்கங்களில் இன்று நாம் உலகையே பார்க்கிறோம். அது போல மனிதன் செய்ய இயலாத வேலையையும் தொழில் நுட்பங்களின் உதவியால் செய்ய முடிகிறது.
அந்த வகையில் ரோபோவினை பயன்படுத்தி எண்ணற்ற செயல்களை செய்கிறோம். ராணுவத்திலும் ரோபோவை பயன்படுத்த திட்டமிட்டு வருகிறோம். அப்படி ராணுவத்தில் ரோபோவை பயன்படுத்தினால் மனித இழப்புகள் குறையும். மேலும் பல வகைகளில் தானியங்கி ரோபோக்களை பயன்படுத்தி வருகிறோம். பல ஆராய்ச்சியும் மேற்கொண்டு வருகிறோம்.

அந்தவகையில் கூகுள் நிறுவனம் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் ( Artificial Intelligence) தொழில்நுட்பங்களுடன் கூடிய ரோபோட்டை உருவாக்கி உள்ளது. இந்த ரோபோட் ஊழியர்களுக்கு காபி, சிப்ஸ் போன்ற உணவுகளை பிரேக்ரூமிலிருந்து எடுத்து கொடுத்து உதவுகிறது. ஊழியர்கள் தங்கள் ஓய்வுநேரத்தில் கேட்கும் உணவுகளை எடுத்து கொடுத்து உதவுகிறது.
ஹைத்ராபாத்தினை சேர்ந்த பள்ளி ஒன்று புதுமையான முயற்சியினை கையில் எடுத்துள்ளது. அது ரோபோ மூலம் மாணவர்களுக்கு பாடம் எடுப்பது தான். ரோபோட்டிக் ஆசிரியர் 5ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரையில் உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறது. இந்த ரோப்போட்டிக் ஆசிரியருடன் கூட்டாக, ஒரு ஆசிரியரும் உடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணுக்குத் தெரியாத உடலின் செல் செயல்முறைகளைக் கவனிக்க டிஎன்ஏவில் இருந்து ஒரு சிறிய ரோபோவை இன்செர்ம், சிஎன்ஆர்எஸ் மற்றும் யுனிவர்சிட்டி டி மாண்ட்பெல்லியர் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இப்படியாக ரோபோவின் தேவைகள் நீண்டு கொண்டே போகிறது. அந்த வகையில் உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளார் சென்னையை சேர்ந்த பிரதீக்.