உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

0
11

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி பெறுப்பேற்றப் பின் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதலமைச்சர் அடிக்கடி நடத்தி தமிழகத்திற்கு வருவாயையும் தொழில் துறையில் வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறார்.

21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைக்கிறார் சி எம் ஸ்டாலின்

முதலமைச்சர் மு க ஸ்டாலின் தூபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு சென்று 6 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்த்து வந்தார். தற்போது,  சென்னை நுங்கம்பாக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இம்மாநாட்டில் புதிய தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் மேற்கொள்கிறது. இதன் மூலம் மூவாயிரத்து 494 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடுகள் கிடைக்கும் என்றும், 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் கூறப்படுகிறது.

21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார் என்றும், இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் 94 ஆயிரத்து 975 கோடி ரூபாய் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் இரண்டு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னையில் தனியார் ஹேட்டலில் நடக்கும் முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 70 ஆயிரம் கோடிக்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. மேலும், 60 ஓப்பந்தங்கள் கையெழுத்தாகிறது என்றும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here