ஐபிஎல் 2022 CSK vs PBKS விளையாட்டின் சுருக்கம்

0
24

ஐபிஎல் 2022 ன் 15ஆவது சீசனின் 38ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

டாஸ் வென்றப் பிறகு பேசிய ரவீந்திர ஜடேஜா அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். அடுத்து பேசிய பஞ்சாப் அணிக் கேப்டன் மயங்க் அகர்வால், அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார். ஷாருக்கான், அரோரா போன்றவர்கள் நீக்கப்பட்டு ராஜபக்சா, சந்தீப் ஷர்மா, ரிஷி தவன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.

சிஎஸ்கே வீரா்கள்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மிட்செல் சாண்ட்னர், அம்பத்தி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திரசிங் தோனி, டுவைன் பிரிடோரியஸ், டுவைன் பிராவோ, மகீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌத்ரி.

பஞ்சாப் வீரா்கள்: மயங்க் அகர்வால், ஷிகர் தவன், ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் ஷர்மா, பனுகா ராஜபக்சா, ரிஷி தவன், காகிசோ ரபாடா, ராகுல் சஹார், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 187 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 46வது ஐபிஎல் அரைசதத்தை விளாசிய தொடக்க வீரர் ஷிகர் தவான் 2 சிக்ஸர்கள் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் குவித்தார். அவருடன் சிறப்பான ஜோடி அமைத்த பானுகா ராஜபக்சே 42 ரன்கள் எடுத்தார்.

சென்னை அணி தரப்பில் பிராவோ 2 விக்கெட்டுகளையும், மகேஷ் தீக்ஷனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். டாஸ் வென்று முதலில் பந்துவீசிய சென்னை அணிக்கு தற்போது 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை அணியின் முதல் ஓப்பனர்களான ருத்ராஜ் கெய்க்வாடும் ராபின் ஊத்தப்பாவும் களமிறங்கினர். ஊத்தப்பா 1 ரன்னில் சந்தீப்பின் பாலில் ரிஷி தவானின் கேச்சில் அவுட்டாகி வெளியேறினார். சான்ட்னர் 8 ரன்னில் அர்ஷதீப் சிங்கின் போல்டாகினார். சிவம் டியுப் 8 ரன்னில் ரிஷி தவான் பந்தில் அவுட்டாகினார்.

ருத்ராஜ் 30 ரன்னில் ரபாடா பந்து வீச்சில் அவுட்டானார். ராயுடு 28 பந்தில் 52 ரன்கள் எடுத்து அரைசதம் கடந்தார் 39 பந்தில் 78 ரன்னில் ரபாடா பாலில் போல்டாகி வெளியேறினார். அவர் 7 பவுன்டரி, 6 சிக்கசரும் எடுத்தார். தோனி 8 பந்தில் 12 ரன்னில் ரிஷி பவிலிங்கில் அவுட்டாகினார். ஜடேஜா 16 பந்தில் 21 ரன்கள் எடுத்தார். ப்ரட்ரியஸ் 1 ரன்னும் எடுத்தார். 20 ஓவர் முடிவில் 176 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here