ஐபிஎல் 2022, 36வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ (RCB) அணியும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணியும் (SRH) அணியும் மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் மோதி கொண்டன. இரு அணிகளும் வலுவான புள்ளி பட்டியலில் உள்ளது. இந்நிலையில் டாஸை வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி விரா்கள்
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), அனுஜ் ராவத், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வனிந்து ஹசரங்கா, ஹர்சல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்
சன்ரைசஸ் ஹைதராபாத் அணி விரா்கள்
அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், ஜெகதீஷா சுசித், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்
பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி, அவருடன் மறுமுனையில் இருந்த மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆனார்கள். களத்தில் இருந்த கிளென் மேக்ஸ்வெல் 12 ரன்னில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அந்த அணியின் அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் பூஜ்ஜிய ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அணியில் அதிகபட்சமாக சுயாஷ் பிரபுதேசாய் 15 ரன்கள் எடுத்தார்.
பந்துவீச்சில் மிரட்டி எடுத்த ஐதராபாத் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் மார்கோ ஜான்சன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளையும், ஜெகதீஷா சுசித் 2 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 16.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் சேர்த்தது. இதனால் பந்துவீச்சில் தொடக்கம் முதல் மிரட்டி வந்த ஐதராபாத் அணிக்கு 69 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இறங்கிய சன்ரைசஸ் அணியின் கேப்டன் கேன்வில்லியம்சனும் எதிர்முனையில் அபிஷேக் சர்மாவும் சேர்ந்து குறுகிய இலக்கை அடைந்து கொண்டு இருந்தனர். அபிஷேக் சர்மா பெங்களூரூ அணியின் ஓவர்களை நாலாபுறமும் சிதறி அடித்தார். அவர் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ஹர்ஷல் பட்டேல் பந்து வீச்சில் அனுஜ் ராவத்திடம் கேச் கொடுத்து வெளியேறினார்.
பின் இறங்கிய ராகுல் திருபாதி 3 பந்துகளில் 7 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார். கேப்டன் கேன்வில்லியம்சன் 17 பந்துகளில்16 ரன்கள் எடுத்திருந்தார். இவ் எளிமையான இலக்கை 8 ஓவர்களிலேயே அடைந்து சன்ரைசஸ் வெற்றி பெற்றது.