IPL 2023 MINI ACTION: அடுத்தாண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக அணிகளில் சிறிய ஏலம் நடைபெற இருக்கின்றது. இந்த ஏலமானது டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருக்கின்றது. அதற்கு ஆயத்தமாக நவம்பர் 15ம் தேதிக்குள் அந்ததந்த அணிகளில் தக்க வைக்கும் வீரர்களையும் விடுவிக்கப்படும் வீரர்களையும் வெளியிட வேண்டும்.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தங்களின் அணியில் இருந்து விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை 5 ஐபிஎல் தொடர்களில் சாம்பியன்ஸ் விருதை வாங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணியை கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் ரோஹூத் சர்மா அணியை வழிநடத்தி வருகிறார்.
இதையும் கவனியுங்ள்: END VS PAK: டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி

அதே போல சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் மகேந்திர சிங் தோனியிலான அணியை வழிநடத்தி இதுவரை நான்கு போட்டிகளில் வென்று இரண்டாவது இடத்தில் இருக்கின்றார். அநேகமாக இவருக்கு இதுவே இறுதி போட்டியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. எனவே, இந்த வருடம் ஐபிஎல் தொடரை சென்னை அணி ஐபிஎல் தொடரை கைப்பற்றி தோனிக்கு பிரியாவிடை பரிசாக அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே வேலையில், மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த தொடரில் பல தோல்விகளை தழுவி இறுதி இடத்திற்கு தள்ளப்பட்டது. பல முன்னணி வீரர்கள் இருந்தும் இந்த நிலை ஏற்பட்டது பலரை வியப்பில் ஆழ்த்தியது. இம்முறை நடக்கும் ஐபிஎல் தொடரில் தங்களின் திறமையை காட்டி வெல்லும் முனைப்புடன் களம் இறங்கும் மும்பை என்பதில் மாற்று கருத்து இல்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைக்கும் வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, சிவம் துபே, ரிதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, முகேஷ் சௌத்ரி, டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் தீபக் சாஹர்
விடுவிக்கும் வீரர்கள்: கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, நாராயண் ஜெகதீஷன் மற்றும் மிட்செல் சான்ட்னர்.
மும்பை இந்தியன்ஸ் தக்கவைக்கும் வீரர்கள்:
தக்கவைக்கும் வீரர்கள்: ரோஹித் சர்மா, டிவால்ட் ப்ரூவிஸ், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டேனியல் சாம்ஸ், டிம் டேவிட், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜஸ்பிரித் பும்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், திலக் வர்மா
விடுவிக்கும் வீரர்கள்: ஃபேபியன் ஆலன், கைரன் பொல்லார்ட், டைமல் மில்ஸ், மயங்க் மார்கண்டே மற்றும் ஹிருத்திக் ஷோகின்.
இந்த இரண்டு அணிகளும் பட்டியலை தயார் செய்து வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸில் நிறைய ஆண்டுகளாக இருந்து வந்த கிரன் பொல்லார்டை விடுவித்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிஎஸ்கே தரப்பில் மீண்டும் ஜடேஜா தக்க வைக்கப்பட்டுள்ளார். தோனி கூறிய அறிவுரைப்படி ஜடேஜா மீண்டும் சென்னையில் இடம் பெற்றுள்ளார் என கூறப்படுகின்றது.
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.