ipl auction 2023: வருகின்ற ஐபிஎல் தொடருக்காக மினி ஏலம் கொச்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக ஓரு மாதத்திற்கு முன்னரே அந்தந்த அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை 10 அணிகளும் வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானேவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. ரஹானேவிற்கு தற்போது 34 வயதாகிறது. இவரின் அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு சென்னை அணி வாங்கியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். மொத்தம் 192 போட்டிகள். அதன் மூலம் 8268 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் 158 போட்டிகளில் விளையாடி 4074 ரன்கள் குவித்துள்ளார். இதில் 2 சதங்கள் விளாசி உள்ளார்.

இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் இவர் கொல்கத்தா நெட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், புனே சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகளுக்காக விளையாடி வந்துள்ளார். தற்போது முதன் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவர் சென்னை அணிக்காக சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட ஆர்வமாகவும் எதிர்பார்ப்புடனும் இருப்பதாக தெரிவித்துள்ளார். சிஎஸ்கே அணியின் ராபின் ஊத்தப்பாவிற்கு மாற்று வீரராக களமிறக்கப்பட உள்ளார். சமீபத்தில் ரஞ்சி கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்: INDVSBAN 2 TEST: முதல் நாள் முடிவில் போட்டியின் விவரங்கள்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.