IPL: ஆர்சிபி (Royal challange Bangalore) அணி மினி ஏலத்தில் கலந்து கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் ஓருமுறை கூட கோப்பையை வெல்ல முடியாத அணியாக செயல்பட்டு வருகின்ற அணியாக ஆர்சிபி அணி இருந்து வருகின்றது. தகுதியான மற்றும் திறமையான வீரர்களை பெற்றிருந்த போதிலும் ஓருமுறைக் கூட கோப்பையை வெல்ல முடியாத நிலையில் இந்த முறையாவது ஐபிஎல் கோப்பையை உறுதி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் களம் காண வருகிறது.
அடுத்தாண்டு தொடங்கும் ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் நிலையில் அணிகளில் மினி ஏலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 23 ம் தேதி ஏலம் கொச்சியில் நடத்தப்படுகிறது. அதன் காரணமாக அணிகளில் தக்கவைக்கும் வீரர்களையும் விடுவிக்கும் வீரர்களையும் அணி நேற்று மாலைக்குள் சமர்பிக்க வேண்டும். அந்த வகையில் ஆர்சிபி அணி 5 வீரர்களை அணியிலிருந்து விடுவிக்கிறது.
இதையும் படியுங்கள்: IPL: சிஎஸ்கே அணியின் மாஸ்டர் பிளான் முழு விபரம்

கடந்த ஆண்டுக்கு முன் ஐபிஎல் வரை RCBயை கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் விராட் கோலி. கடந்த போட்டியிலிருந்து சென்னை அணியின் அதிரடி பேட்டராக ஓவப்பனாராக இருந்து வந்த டூப்பிளிஸ் தற்போது அந்த அணியை கேப்டனாக வழிநடத்தி வருகின்றார். விராட் கேப்டன் பொறுப்பை வேண்டாம் எனக் கூறியதால் இந்த கேப்டன் சி அவருக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆர்சிபி தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:
டூப்ளசிஸ், விராட் கோலி, சுயாஸ் பிரபுதேசாய், ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், க்ளென் மேக்ஸ்வெல், வானிண்டு ஹசரங்கா, சபாஷ் அகமது, ஹர்ஷல் பட்டேல், டேவிட் வில்லி, கார்ன் ஷர்மா, மஹிபால் லோம்ரார், முகமது சிராஜ், கார்ன் ஷர்மா, மஹிபால் லாம்ரார், முகமது சிராஜ், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்
ஆர்சிபி விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியல்:
ஜேசன் பெஹண்டார்ஃப், அனீஸ்வர் கௌதம், சாமா மிலிண்ட், லுவ்னித் சிஸோடியா, ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட். இதில் ஆர்சிபி அணியில் நட்சத்திர வீரராக பார்க்கப்பட்டவர் ஜேசன் பெஹண்டோர்ஃப் ஆகும்.
இது போன்ற பல தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.