IPL MINI AUCTION 2022: வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்னர் ஐபிஎல் அணியில் சில மாற்றங்களை எடுத்து வர அனைத்து அணிகளும் கோரிக்கை வைத்ததன் பேரில் வருகிற 23ந் தேதி வெள்ளிக் கிழமை கொச்சியில் மினி ஏலம் நடத்த திட்டமிடப்பட்டது.
இதன் காரணமாக அந்தந்த அணியில் யாரை வெளியேற்றுவது யாரை தக்கவைத்து கொள்வது பற்றிய அறிக்கையை சமர்பிக்க அறிவுறுத்தியது. அறிவுறுத்தியப்படி அறிக்கையையும் வெளியிட்ட அணிகள் தற்போது திறமையான வீரர்களை எடுக்கும் முக்கிய கட்டத்தில் இருக்கின்றது.
இந்த ஐபிஎல் தொடரில் நான்கு முறை கோப்பையை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மிக முக்கியமாக தேவைப்படும் வீரராக ஓரு ஆல்ரவுண்டரை ஏலத்தில் எடுக்கவுள்ளது.

டிவைன் பிராவோ சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதால் அந்த இடத்தை பூர்த்தி செய்ய சிறந்த ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறது. அதனால் சென்னை அணி இங்கிலாந்து ஆல்ரவுண்டராக இருந்து கடந்த டி20 உலக கோப்பைக்கு உறுதுணையாக இருந்த சாம் கரணை மினி ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியா பாகிஸ்தானை நாக் அவுட் சுற்றில் சிறப்பாக செயல்பட்டது. அதற்கு முக்கிய காரணமாக கருதப்பட்டவர் சாம் கரண்.
உலகக் கோப்பையில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக 11.38 சராசரியில் 6.52 என்ற பொருளாதாரத்தில் தனது விக்கெட்டுகளை எடுத்தார். ஐபிஎல்லில் சாம் கர்ரன் 32 போட்டிகளில் விளையாடி 337 ரன்கள் எடுத்துள்ளார், ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் மற்றும் சராசரி 22.47 வைத்துள்ளார். பந்து வீச்சில், அவர் 32 விக்கெட்டுகள் மற்றும் ஒரு போட்டிக்கு சராசரியாக ஒரு விக்கெட் மற்றும் 11/4 என்ற சிறந்த எண்ணிக்கையைப் பெற்றுள்ளார்.
சாம் கரண் 2 கோடி அடிப்படை விலையில் இருந்து வருகிறார். இந்த ஏலத்தில் இவருக்கு நிறைய போட்டிகள் நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. எதையும் வருகிற 23ந் தேதி வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்: FIFA WORLD CUP 2022: இறுதி போட்டியில் யாருக்கு என்ன பரிசு முழு பட்டியல்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.