IPL MINI AUCTION: அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கு கொள்வதற்காக பல முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அந்தந்த அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் வெளியிட கால அவகாசம் தரப்பட்டது. அந்த வகையில் ஐபிஎல்லில் 10 அணிகளும் பங்கு பெற்று தங்களின் நிலையை அறிவித்தது.
ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று கேரளா மாநிலம் கொச்சியில நடைபெற்றது. இதில் பல முன்னணி வீரர்களுக்கு பெரும் போட்டி நிலவி வந்தது. முதன் முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கவும் ஐபிஎல் தொடரில் முதன் முறையாக விளையாடவும் வீரர்கள் ஏலத்தில் வந்திருந்தனர்.
கொச்சியில் நடைபெற்று வந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகள் பங்கு பெற்றது. இதுவரை 167 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. 29 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 80 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது ஐபிஎல் அணிகள்.

இங்கிலாந்து நட்சத்திர வீரரான ஜோ ரூட்டை 1 கோடி கொடுத்து ராஜஸ்தான் அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் இவர் வருகிற ஐபிஎல் தொடரில் முதன் முறையாக ராஜஸ்தானுக்காக களமிறங்க உள்ளார். இவரை முதல் சுற்றில் எந்த அணியும் எடுக்காத நிலையில் இரண்டாவது சுற்றில் வாங்கியுள்ளது ராஜஸ்தான்.
ஜோரூட்டை தொடர்ந்து முதல் முறையாக ஐபிஎல் தொடரில் தடம் பதிக்கவுள்ளவர் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் இவரை 13.25 கோடி செலவு செய்து வாங்கியுள்ளது சன்ரைசஸ் ஹதராபாத். இவர் டி20 போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் ஆல் ஹாசனை முதல் சுற்றில் எந்த ஒரு அணியும் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் , அடுத்த சுற்றில் ரூ.1.50 கோடிக்கு விலைக்கு வாங்கியது கொல்கத்தா அணி
முதல் சுற்றில் ஏலம் போகாத தென் ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் ரிலீ ரோசோவ் இரண்டாவது சுற்றில் ரூ.4.60 கோடிக்கு டெல்லி அணி ஏலம் எடுத்தது. அதே போல முதல் சுற்றில் ஏலம் போகாத ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஜாம்பா 2வது சுற்றில் விலை போனார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது.
இதையும் படியுங்கள்: IPL MINI AUCTION: அதிக விலைக்கு ஏலம் போன முதல் 5 வீரர்கள்
கடந்த போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று வந்த நாராயணன் ஜெகதீசனை விடுவித்த நிலையில் இந்த ஏலத்தில் 90 லட்சத்திற்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. ஓரே நாளில் 167 கோடி ரூபாய் செலவில் முடிந்துள்ளது ஐபிஎல் மினி ஏலம்.
இது போன்ற பல தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.