IPL MINI AUCTION: வருகின்ற 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சில மாற்றங்களை கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. அதில் வீரர்களை மினி ஏலம் மூலம் வாங்க அந்தந்த அணி நிர்வாகமும் சம்மதம் தெரிவித்தது. அதன்படி நேற்று கொச்சியில் மினி ஏலம் நடத்தப்பட்டது. இதில் 10 அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்கள் அணிக்கு தேவையான நபர்களை தேர்ந்தெடுத்து ஏலத்தில் எடுத்தனர்.
இந்த மினி ஏலத்தில் யாரும் எதிர்பார்க்க முடியாத அளவில் இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கர்ரணை 18.50 கோடிக்கு வாங்கியுள்ளது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இவர் கடந்த டி20 உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து அணி டி20 உலக கோப்பையை வெல்ல முன்னணி நாயகனாக இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து அவருக்கான விலை அதிகரித்து காணப்பட்டது.
இதற்கு முன்னர் சாம் கரண் சென்னை அணியில் விளையாடி உள்ளார். ஓரு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் அடுத்த ஐபிஎல் தொடரில் சொதப்பலில் சிக்கினார் அதன் காரணமாக சென்னை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

சாம் கர்ரணை தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரரான கேமரூன் கிரீனை 17.50 கோடியை செலவிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. பொல்லார்டின் இடத்தை பூர்த்தி செய்ய இவரை தேர்வு செய்து எடுத்துள்ளது மும்பை அணி. இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்துள்ள கிரீன் டி20 தொடர்களில் ஸ்டைரைக் ரோட் 150 பெற்றுள்ளார்.
அடுத்ததாக, சென்னை அணி 16.25 கோடி செலவு செய்து இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளது. ப்ராவோ இடத்தை பூர்த்தி செய்ய இவரை செனைன சூப்பர் கிங்ஸ் அணி எடுத்துள்ளது. இவம் அதற்கு தகுதியானவராகவும் பார்க்கப்படுகிறது. சென்னை அணியில் ஆல்ரவுண்டரான ஜடேஜாவுக்கும் நிர்வாகத்திற்கும் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளுக்கு இன்னோரு ஆல்ரவுண்டர் தேவைப்பட்டதன் காரணமாக இவரை சென்னை அணி வாங்கியுள்ளது.
இவரை அடுத்து நிக்கோலஸ் பூரானை 16 கோடி செலவு செய்து லக்னோ சூப்பர் ஜெயின்ட் அணி இவரை வாங்கியுள்ளது. இந்த அணியில் சீனியர் வீரரான டிகாக் இருக்கும் பொழுதே இவரையும் ஸ்கெட்ச் போட்டு எடுத்துள்ளது லக்னோ அணி. இவர் வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த வீரராக செயல்படுபவர் டி20 போட்டிகளிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர்.
இங்கிலாந்து வீரரான ஹாரி பூரூக்கை 13.50 கோடி கொடுத்து சன்ரைசஸ் ஹதராபாத் அணி வாங்கியுள்ளது. இவரது அடிப்படி விலையான 1.50 கோடியிலிருந்து 13.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு பலத்த போட்டி நிலவியதே இதற்கு காரணம்.
புரூக் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளது இதுவே முதல் முறை. இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டனாக புரூக் செயல்பட்டுள்ளார். 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள புரூக் 3 சதங்களை விளாசியுள்ளார். பாகிஸ்தான் பீரிமியர் லீக் தொடரில் 48 பந்துகளில் சதம் அடித்தும் ஹாரி புரூக் அசத்தியுள்ளார்.
இதையும படியுங்கள்: IPL மினி ஏலத்தில் CSK எடுத்த வீரர்களின் முழு பட்டியல்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.