வதந்திகளை நம்பாதீர் என சென்னை வானிலை மையம் அறிக்கை

0
17

சில நாட்களாகவே சூரியன் பூமியை விட்டு வெகு தூரம் செல்வதாகவும் அதனால் கடும் குளிர் நிலவும் என பரவலாக சமூக வலைதளங்களில் பொய்யான தகவல் பரவுகிறது. அது முற்றிலும் வதந்தி இதை யாரும் நம்ப வேண்டாம் என சென்னை வானிலை மையம் விளக்கியுள்ளது.

இது குறித்து அறிவியல் பலகை அமைப்பினுடைய மாநில ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஸ்ரீகுமார் கூறியிருப்பதாவது, பூமி மற்றும் சூரியனுக்கு இடையேயான தூரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது அதனால் அதிகமான குளிர் ஏற்படும் என்ற தகவல் பொய்யானது.

வதந்திகளை நம்பாதீர் என சென்னை வானிலை மையம் அறிக்கை

ஆண்டுதோறும் நீள்வட்ட பாதையில், சூரியனை பூமி சுற்றி வரும் போது ஒரு கட்டத்தில் சூரியனுக்கு மிகவும் அருகில் வரும். அதற்கு மற்றொரு காலத்தில் சூரியனிலிருந்து தூரத்தில் செல்லும். அதற்கு அப்ஹீலியன் என்று பெயர். ஜூலை மாதத்தில் தான் இந்த நிகழ்வு ஏற்படும். அப்போது பூமி ஏறக்குறைய 152 மில்லியன் கிலோமீட்டர் சூரியனிலிருந்து தூரமாக இருக்கும்.

ஆனால், இந்த நிகழ்வுகளினால் பூமியின் தட்பவெப்ப நிலையில் எந்த மாற்றமும் ஏற்படாது இந்த நிகழ்வின் போது பூமியை விட்டு சூரியன் தூரமாக செல்கிறது. எனவே அதிக குளிர் ஏற்படும் என்று யாரோ யோசித்து இருக்கிறார்கள். அதனால் குளிர் மற்றும் காய்ச்சல் ஏற்படும் என்று சிந்தித்து தானாகவே போலியாக செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதில், அப்ஹீலியன் என்னும் நிகழ்வை அலிபென் என்று தவறாக பெயரிட்டு சிலர் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இது முற்றிலும் பொய் என்று கூறியிருக்கிறார். உண்மை அறிவியல் மட்டும் தான் மக்களிடம் சென்று சேர வேண்டும். மாறாக போலியான தகவல்களை சென்று சேர்ப்பது தவறு என்றும் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here