விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டாவால் வெளியான சர்ச்சை

0
8

விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டாவால் வெளியான சர்ச்சை. விக்னேஷ் சிவன் தொடர்ச்சியாக நயன்தாரவுடன் உள்ள பல புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் அனுப்பிய புகைப்படத்தில் மூன்று குழந்தைகளுடன் உள்ள புகைப்படத்தையும் அனுப்பி இருந்தார். அதில் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து நயன்தாரா கர்ப்பமாக உள்ளாரா என சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் ரசிகர்கள். இது பெரும் சர்ச்சையாக சமூகவலைதளத்தில் உலா வந்து கொண்டுள்ளது.

இதையும் கவனியுங்கள்: நயன் – விக்கி திருமணம் குறித்த ப்ரோமோ ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் வெளியிட்டடது

தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமாகவும் தமிழகத்தின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் வலம் வருபவர் நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன்  ஏழு வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஜூன் மாதம் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள மிகப் பெரிய ரிசார்ட்டில் பிரம்மாண்டமான முறையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்வுகளை நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி வலைதளத்தில் விரைவில் வெளியிட உள்ளன.

விக்னேஷ் சிவன் வெளியிட்ட போட்டாவால் வெளியான சர்ச்சை

இந்நிலையில், விக்கியின் பிறந்தநாளை கொண்டாட இருவரின் குடும்பமும் துபாயில் கூடி கேக் வெட்டி சிறப்பான முறையில் செலிபிரேட் செய்துள்ளனர். தனது மனைவி தனக்கு கொடுத்த சர்ப்ரைஸை எண்ணி மகிழ்ந்து விக்னேஷ் சிவன் அவரை புகழ்ந்து சமூக வலைதள பக்கத்தில் ரைட்டப் போட்டிருந்தார்.

விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் தற்போது மற்றொரு புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார், அதுதான் தற்போது வைரலாகி வருகிறது.

அப்படி என்ன புகைப்படம் என்றால் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் மூன்று குழந்தைகளுடன் நிற்கின்றனர், அதில் ஹைலைட் என்னவென்றால் குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்கான பயிற்சி என்று எழுதியுள்ளார். இப்படி ஒரு வசனத்தை பார்த்ததும் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறார் போலஎன்றும் சில ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என்றும் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here