விடுதலை படத்தில் இதுவரை கேட்காத இசை இருக்கும்- இளையராஜா பேட்டி

0
7

விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் 2 பாகங்களாக உருவாகியுள்ள படம் ‘விடுதலை’. எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ என்ற சிறுகதையை மையமாக வைத்து இப்படத்தை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார். புரட்சிகரமான வாத்தியார் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய இளையராஜா இசையமைத்துள்ளார். ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இளையராஜா பேசும்போது,

ilayaraja speech about viduthalai music in viduthalai audio launch

‘இதுவரை 1,500 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். அப்படி என்றால் 1,500 இயக்குனர்களுடன் பணிபரிந்து இருக்கிறேன். அவர்களிடம் எல்லாம் பார்க்காத ஒரு விஷயத்தை வெற்றிமாறினிடம் பாரக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு கோணத்தில் திரைக்கதை சொல்கிறார். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த முக்கியமான இயக்குனரான அவரைப் பாதுகாக்க வேண்டும். ‘விடுதலை’ படத்தில் இதுவரை நீங்கள் கேட்காத இசையைக் கேட்கலாம். இதுவரை இதுபோன்ற கதைக்களத்தை தமிழ் சினிமாவில் பார்த்திருக்க முடியாது’ என்று கூறினார். இந்நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன், பவானிஸ்ரீ, எழுத்தாளர்கள் ஜெயமோகன், சுகா மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here