கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்த இஷான் கிஷான்

0
17

கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்த இஷான் கிஷான். வங்கதேசத்திற்கு எதிரான 3வது ஓருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் இரட்டை சதம் விளாசி சாதனை புரிந்துள்ளார்.

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி வரை சென்று வெளியேறியது. இதனால் மிகுந்த வருத்ததில் ரசிகர்கள் இருந்து வந்தனர். பின்னர் நியூலாந்துக்கு பயணம் மேற்கொண்டு விளையாடி வந்தனர். அங்கும் சரியாக விளையாடததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வந்த ரசிகர்கள் அடுத்தாண்டு உலக கோப்பை ஓருநாள் தொடர் தொடங்கும் நிலையில் இப்படி இந்திய அணி சொதப்பி வருவது நல்லதல்ல என்று விமர்சித்து வந்துள்ளனர்.

தற்போது, 3 ஓருநாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடர்களை வங்கதேச அணிக்கு எதிராக அவர்கள் மண்ணில் விளையாடி வருகிறது. இதில் 2 ஓருநாள் தொடர்களிலும் இந்திய அணி தோல்வி அடைந்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்நிலையில், 3வது ஓருநாள் போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெறுமா என அனைவரும் பார்த்து வருகின்றனர்.

கிறிஸ் கெய்லின் சாதனையை உடைத்த இஷான் கிஷான்

டாஸை வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய தரப்பில் முதலாவதாக களம் இறங்கிய தவான் விரைவில் வெளியேறினார். இஷான் கிஷன் ஆரம்பத்தில் நிதனமாக ஆடி அரைசதம் கடந்தவுடன் பந்துகளை நாலாபுறமும் அடித்தார். இதனால் 86 பந்துகளில் சதம் விளாசினார். தொடர்ந்து அதிரடி காட்டிய இஷான் 126 பந்துகளில் 23 பவுன்டரியும் 9 சிக்சர்களையும் பறக்க விட்டார். இவர் சர்வதேச ஓருநாள் போட்டியில் அடித்த முதலாவது சதம் மற்றும் இரட்டை சதம் விளாசி இளம் வயதில் இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இறுதியாக 130 பந்துகளில் 210 ரன்களை எடுத்திருந்த போது பவுன்டரி எல்லையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதற்கு முன்னர் கிறிஸ் கெய்ல் 136 பந்துகளில் இரட்டை சதம் அடித்திருந்தார். அந்த சாதனையை உடைத்த இவர் 126 பந்துகளில் இரட்டை சதம் கண்டு அவரை முந்தி சாதனை படைத்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்த விராட் கோலி

இதன் மூலம் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சச்சின், ரோகித் சர்மா மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோருடன் எலைட் லிஸ்டிலும் இடம்பிடித்தார். வங்கதேசம் அணிக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் அடித்த தனிநபர் அதிகபட்ச ஸ்கோரும் இஷான் கிஷன் வசமே வந்துள்ளது.

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை நாடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here