மதுரை வண்டியூர் கண்மாயில் 63 கோடி மதிப்பில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு அதற்கான வரைப்படம் தயாரிப்பு.
புகழ் பெற்ற வைகை நதி கரையில் அமைந்துள்ள ஊர் மதுரை. சங்கம் வளர்த்த மதுரைக்கு ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன. மதுரை நதி கரையில் அமைந்துள்ள வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளமும் பல்வேறு சிறப்புகளைப் பெற்றது. இந்த தெப்பக்குளம் மதுரையின் முக்கிய சுற்றுலா தலமாகவும் இருந்து வருகிறது.
சிவாஜி நடித்த பராசக்தி, பரத் நடித்த காதல், ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் இந்த வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தைப் பார்க்கலாம். அந்த அளவிற்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரையில் இது ஒரு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்டாக இருந்து வருகிறது. திரைப்படம், டிவி சீரியல்கள் மட்டுமல்லாது மதுரை மக்கள் தங்கள் திருமண போட்டோ ஷூட்டையும் இங்கே நிகழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வண்டியூர் கண்மாய் 600 ஏக்கர் பரப்பளவில் நகரின் நடுவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது. தற்போது பாசனப்பரப்பு குறைந்ததால் இப்பகுதி மக்களின் நிலத்தடி நீராதாரமாக உள்ளது. ஆக்கிரமிப்பை நிரந்தரமாக அகற்றும் வகையில் கண்மாயின் நான்கு பகுதிகளிலும் வாசலுடன் நடைபாதை அமைக்க வேண்டும். உள்ளே படகு மற்றும் நீர் விளையாட்டுகளை ஒருங்கிணைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது தமிழக அரசு மதுரை வண்டியூரில் சூற்றுச்சூழல் பூங்கா அமைக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஓரு பகுதியாக 63 கோடி மதிப்பிட்டில் அதற்கான பணிகளை மேற்கொள்ள வரைப்படம் தயாராகி வந்துள்ளது.