கள்ளிக்காட்டு இதிகாசத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் நன்றாக இருக்கும் என கவியரசு வைரமுத்து கூறியுள்ளார்.
தமிழ்த் திறையுலகை 45 ஆண்டு காலம் தன் கவிதைகளாலும் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் கவியரசு வைரமுத்து. வைரமுத்து என்றதுமே நம்முன்னால் வெள்ளை ஜிப்பா அணிந்து கனீர் குறலுடன் இருக்கும் நபரை மனம் காட்டுகிறது.
1980-ம் ஆண்டு பாராதிராஜா இயக்கிய நிழல்கள் திரைப்படத்திற்காக தன் முதல் திரைப் பாடலை எழுதினார் வைரமுத்து. முதல் பாடலை இவர் எழுதிய அதே நாளில் இவருக்கு முதல் குழந்தையும் பிறந்தது. ”எனக்கும் என் மனைவிக்கும் ஒரே நாளில் பிரசவம் நடந்தது” என இதையும் தனக்கே உரிய தமிழில் புன்னகையுடன் நினைவு கூறுவார் வைரமுத்து.

இளையராஜாவால் அறிமுகம் கிடைத்தாலும் ஏ.ஆர்.ரஹ்மானின் வருகைக்கு பின்னரே சர்வதேச எல்லைகளை தன் தமிழ் கடந்ததாக பல மேடைகளில் கூறியுள்ளார் வைரமுத்து. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான ’முதல் மரியாதை’ படத்தின் அனைத்து பாடல்களுக்காக முதல் முறையாக சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை பெற்ற வைரமுத்து அதன்பின் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக் காற்று, தர்மதுரை படங்களின் பாடல்களுக்காக பல தேசிய விருதுகளை வாங்கி குவித்தார்.