மகேந்திர சிங் தோனி தற்போது தமிழில் படம் ஓன்றை தயாரிக்க உள்ள செய்தி நாம் அறிந்ததே அதில் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக பிரதீப் ரங்கராஜன் படத்தின் கதாநாயகி இவானா நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாகவும் மக்களால் கூல் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படும் தோனிக்கு உலக அளவில் ரசிகர்கள் காணப்படுகின்றனர். இந்த நிலையில் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது, ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பங்கு பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்.
தோனி தனது பண்ணையில் விவசாயம் மற்றும் கோழிகளை வளர்த்தல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ”தோனி எண்டர்டைன்மண்ட்” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் ‘ரோர் ஆஃப் லயன்’ என்ற ஆவணத்தொடரை தயாரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து 2011ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை அடிப்படையாகக் கொண்டு ‘ப்ளேஸ் டு க்ளோரி’ (Blaze to Glory) என்ற ஆவணப்படம் உள்ளிட்ட சில படைப்புகளை தயாரித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் தோனி எண்டர்டைன்மண்ட் தயாரிப்பு நிறுவனம் தனது முதல் தமிழ் மொழியில் படத்தை தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த படத்தின் கதையை தோனியின் மனைவி சாக்ஷி கூற அப்படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்குவார் எனவும் தெரிவித்தது. இந்த படத்தின் கதாநாயகனாக ஹிரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் அறிவித்தது. மேலும், இவருடன் நகைச்சுவை நடிகர் யோகிபாபு மற்றும் நதியா நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.
நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக லவ் டுடே கதாநாயகி இவானா நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தின் பெயர் ‘லெட்ஸ் கெட் மேரீட்’ (Lets Get Married) என வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது குறிப்படத்தக்கது.
இதையும் படியுங்கள்: தளபதி 67 குறித்த அப்டேட் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ்
இது போன்ற தகவல்களுக்கு தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.