சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்-கமலஹாசன்

0
10

சென்னையில் நடந்த மக்கள் நீதி மையத்தின் கூட்டத்திற்கு பின் பேசிய கமலஹாசன் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று கூறினார்.

தமிழகத்தின் தலைநகரில் உள்ள அடையாறில் மக்கள் நீதி மையத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகரும் ம.நீ.மை. கட்சியின் தலைவருமான கமலஹாசன் கலந்து கொண்டு பேசினார். அதில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் என்னுடன் வந்த கட்சியின் நிர்வாகிகளுக்கு நன்றி கூறி பேச ஆரம்பித்த கமல்.

இந்தியாவில் பா.ஜ.கா மதவாத அரசியலை பயன்படுத்தி ஆட்சி செய்து வருகிறது. நாட்டில் பிரிவினைவாதம் ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், கட்சியின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்தும் தீவிர ஆலோசனைகளை நிர்வாகிகளுடன் கலந்து பேசினார்.

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்-கமலஹாசன்

இதற்குமுன் தமிழ்நாட்டின் ஆளுநர் தமிழ்நாட்டை தமிழகம் எனக் குறிப்பிட வேண்டும் என்று கூறியதை மறுத்தும் பேசியிருந்தார் கமல். மேலும், பாரதத்தின் இழந்த மாண்புகளை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் உள்ளது. கட்சிக்கு அப்பாற்பட்ட யாத்திரை இது. அதையும் சொல்லிவிட்டு அடுத்தகட்ட ஏற்பாடுகளைச் சொன்னோம். என் மனதில் உள்ள திட்டங்களில் ஒன்று சென்னையில் ஜல்லிக்கட்டைக் கொண்டு வந்து நடத்த வேண்டும் என்பது. அதற்கான அனுமதிகளைப் பெறுவதற்காக முயன்று வருகிறோம். மற்றபடி கட்சி சம்பந்தமான விஷயங்களை விவாதித்தோம்.

சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்காகப் போராட்டம் நடந்த இடத்திலேயே நடத்த முடியாது. அதில் சில சட்டச்சிக்கல்கள் உள்ளன. ஆனாலும் சென்னையில் நடத்த வேண்டும். நகரத்தில் உள்ளவர்களுக்கு அதன் அருமை தெரியவேண்டும் என்பது எங்கள் ஆசை.” எனக் கூறினார்.

இதையும் படியுங்கள்: சென்னை மெரினா கடற்கரைப் பகுதியில் ரோப் கார் திட்டம்

இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here