சென்னையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. சென்னையை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் வீர விளையாட்டுகளில் ஓன்றான ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு பல தடைகள் வந்தது அதை எல்லாம் வென்று காட்டி வந்துள்ளனர் தமிழக மக்கள். பீட்டா போன்ற அமைப்புகளால் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்த தமிழ்நாட்டின் மக்கள் மெரினாவில் மிகப் பெரிய போராட்டத்தை ஏற்படுத்தினர்.
உலகமே உற்று பார்க்கும் அளவில் மிகப் பெரிய போராட்டமாக இருந்தது. தமிழர்களின் பாரம்பரியங்களில் பீட்டா போன்ற அமைப்புகள் வீண் குற்றச்சாட்டை சுமத்தி ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை வித்தது. இதனால் தமிழ்நாட்டின் தலைநகரமே அல்லோளப்பட்டது குறிப்பிடத்தக்கது. உடனடியாக இதற்கு தீர்வு காணப்பட்டு இதனை தமிழக அரசே திட்டத்தை வகுத்து நடத்தும் எனவும் கூறப்பட்டது.

தமிழ்நாட்டின் பொங்கல் திருநாளில் பல ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம் தற்போது இதனை சரியாக அரசின் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே நம் நினைவுக்கு வருவது அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடி இது தவிர சிறிய சிறிய ஊர்களில் சிறப்பான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை போன்ற நகரங்களில் தமிழர்களின் பண்பாட்டை பாரம்பரியத்தை கொண்டு செல்லும் நோக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று பலத்தரப்பிடம் இருந்து கோரிக்கை வந்தது. உலக நாயகன் கமலஹாசனும் சென்னை தலைநகரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த வேண்டும் என்று கூறியுருந்தார்.
இந்த நிலையில், வருகிற மார்ச் மாதம் 5ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகளை படப்பையில் நடத்த திட்டம். இதில், 501 காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் களத்தில் இறங்க உள்ளனர். போட்டியில் முதல் இடம் பெறும் காளையின் உரிமையாளருக்கு காரும், மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர்தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: ஏறு தழுவுதல் நம் அடையாளம் தடைகளை வீரத்துடன் முறியடிப்போம்-கமல்
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.