விஜய்சேதுபதியுடன் நடிக்க விருப்பம் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர். இந்தியில் அறிமுகமாகி பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்து வருபவர் ஜான்வி கபூர்.
தமிழ் திரையுலகின் 80 களில் ஸ்ரீதேவி ரஜினிகாந்த், கமலஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர். சில வருடங்களுக்கு முன் மறைந்தார் ஸ்ரீதேவி இவர் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் போனிகபூரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு இரு குழந்தைகள் அதில் மூத்தவர் ஜான்வி கபூர்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக நடித்து வருகிறார். பிற மொழிப்படங்களில் ரீமெக்கிலும் நடித்து வருகிறார். விரைவில் தென்னிந்திய படங்களிலும் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இவர் தமிழ் திரையுலகில் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகையாகவும் உள்ளார்.

இந்நிலையில், விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடி தான் படத்தை 100 முறைக்கு மேல் பார்த்து ரசித்துள்ளதாகவும் 100 வது முறை பார்த்த பிறகு விஜய்சேதுபதிக்கு போன் செய்து பேசியுள்ளார். அதில் உங்கள் படமான நானும் ரவுடி தான் படத்தை பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்துள்ளது மேலும், உங்களுடன் சேர்ந்து நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். வாய்ப்பு இருந்தால் கூறுமாறும் உங்களுடன் நடிக்க காத்திருக்கின்றேன் என்றும் கேட்டுள்ளார்.
இதை கேட்ட விஜயசேதுபதி ஐயோ ஐயோ என்றார் அவர் கோபப்பட்டாரா இல்லை வெட்கப்பட்டாரா என்பது எனக்கு புரியவில்லை என்று கூறினார். அவரின் ரியாக்ஷனை பார்த்து அதிர்ச்சியுற்றதாகவும் கூறியுள்ளார். ஆக விரைவில் தமிழ் படங்களில் ஜான்வி கபூர் நடிக்க இருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது.
இதையும் படியுங்கள்: துணிவு படத்தின் சில்லா சில்லா படத்தின் பாடல் 9ந் தேதி வெளியாகிறது
இது போன்ற தகவல்களை பெற தலதமிழ் இணையதளத்தை பின்பற்றுங்கள்.