பும்ராவின் ஜாலத்தில் இந்திய அணி முதல் ஓருநாள் போட்டியை வசமாக்கியது. நேற்று பகல் இரவு ஆட்டமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஓருநாள் ஆட்டம் மாலை தொடர்ந்தது, முதலில் களமிரங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். பும்ரா மற்றும் முகமது ஷமியின் துல்லியமான பவுலிங்கில் 110 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணி சார்பில் பும்ரா 7 ஓவர் 2 பால்கள் வீசி 3 மொயிடன் மற்றும் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 7 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பான்டியா விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. பிரதிஷ் கிருஷ்ணா 5 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். சூழற்பந்து வீச்சாளரான சாஹல் 2 ஓவர்கள் வீசி 10 ரன் கொடுத்து விக்கெட் எதுவும் எடுக்கவில்லை.

111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் சேர்ந்து வெற்றி இலக்கை அடைந்து இந்திய அணிக்கு வெற்றி கொடுத்தனர். ரோஹித் 58 பந்துகளை சந்தித்து 5 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகளும் எடுத்து 76 எடுத்தார்.தவான் 54 பந்தில் 31 ரன்கள் 4 பவுன்டரிகள் எடுத்து இங்கிலாந்து அணியின் பவுலர்ளை திக்கு முக்கு ஆட செய்தனர்.
இங்கிலாந்து மண்ணிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிகள் டெஸட் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி உள்ளது. தற்போது ஓருநாள் தொடரில் 3 க்கு 1 என்ற விகிதத்தில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.