100 கோடி பட்ஜெட்டில் 10 மொழியில் உருவாகும் ஜெயம் ரவி படம்

0
14

ஜெயம் ரவி: என். கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த மார்ச் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘அகிலன்’. சாம் சி.எஸ் இசையமைத்திருந்த இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை எதிர் கொண்டது. இப்படம் பார்வையாளர்களை பெரிதும் கவராத நிலையில் அடுத்து ஜெயம் ரவி நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து அஹமத் இயக்கத்தில் ‘இறைவன்’, ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ‘சைரன்’ உள்ளிட்ட படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக உள்ளன.

jayam ravi's upcoming 32th film making at 100 crore budget

இந்நிலையில் இந்த படங்களை தொடர்ந்து உருவாகும் ஜெயம் ரவியின் 32வது படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாகவும், படத்தின் பட்ஜெட் 100 கோடி எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படம் 10க்கும் அதிகமான மொழிகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்க உள்ளாராம். மேலும் படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here