JEE Main 2022: கூட்டு நுழைவுத் தேர்வு முதன்மை 2022 தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைப்பதாக NTA (National Test Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
JEE முதன்மை தேர்வு (JEE Mains) 2022 ஏப்ரல் மாதம் 21, 24, 25, மற்றும் 29 ஆகிய தேதிகள் மற்றும் மே மாதம் 1, 4, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளி்ல் தேர்வுகள் நடைபெறும் என JEE முதன்மை தேர்வு முகமை அறிவித்து இருந்தது.
அதே தேதிகளில் போர்டு தேர்வுகளும் வருவதால் மாணவர்கள் குழப்பத்தில் இருந்தனர். அதனால் மாணவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் JEE முதன்மை அலுவலகத்திற்க்கும் கோரிக்கை தொடர்ந்து வைத்த வண்ணம் இருந்தனர்.
மாணவர்களின் கோரிக்கையையும் மாணவர்களின் மனநிலைகளையும் கருத்தில் கொண்டு JEE மெயின் தேர்வுக்கான தேதிகளை மாற்றி அமைத்துள்ளது.
அதன்படி ஏப்ரல் மாதம் நடைபெற விருந்த தேர்வுகள் ஜூன் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. அதே போல மே மாதம் நடைபெற இருந்த தேர்வுகள் ஜூலை மாதத்திற்கும் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதியதாக மாற்றப்பட்ட அறிவிப்பின்படி,
- ஜூன் 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 மற்றம் 29 ஆகிய தேதிகளில் JEE மெயின் தேர்வுக்கான அமர்வு 1 நடைபெறும்.
- ஜூலை 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் JEE மெயின் தேர்வுக்கான அமர்வு 2 நடைபெறுவதாகவும் அறிவித்துள்ளது.
JEE Main முதற்கட்ட அமர்வுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் முடிவடைந்த நிலையில் JEE மெயின் இரண்டாம் அமர்வுக்கான விண்ணப்ப செயல்முறை விரைவில் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த மேம்படுத்தப்பட்ட தகவல்களை பெற NTA வின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.nta.ac.in பார்க்கவும். அல்லது JEE-யின் வலைத்தளமான jeemain.nta.nic.in ஐ பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
JEE Main தேர்வு 2022 அமர்வு ஓன்றுக்கான விண்ணப்பத் திருத்தம் ஏப்ரல் 6ம் தேதியான புதன் கிழமை முதல் ஏப்ரல் 8ம் தேதியான வெள்ளி கிழமை வரை இருக்கும்.
மாணவர்கள் தாங்கள் வழங்கிய தகவல்களில் மாற்றங்களைச் செய்ய விரும்பினால், அதிகாரப்பூர்வ இணையதளமான jeemain.nta.nic.in-ல் உள்நுழைந்து JEE முதன்மை 2022 விண்ணப்பப் படிவத்தைத் திருத்தம் செய்து கொள்ளலாம்.